ஏடிஎம் இயந்திரத்தில் கார்டை நுழைத்தால் வெளியே வரும் கொழுக்கட்டை; புனேவில் புதுமை

வழக்கமாக ஏடிஎம் இயந்திரத்தில் கார்டை நுழைத்தால் பணம் வெளியே வரும். ஆனால் புனேவில் கொழுக்கட்டை வெளியே வருகிறது.

நாடு முழுவதும் கடந்த வாரத்தில் விநாயகர் சதுர்த்தி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. மகாராஷ்டிர மாநிலம், புனே சஹாகர் நகரைச் சேர்ந்த சஞ்சீவ் குல்கர்னி இதில் புதுமையைப் புகுத்த நினைத்தார்

ஏடிஎம் போன்ற இயந்திரத்தை உருவாக்கிய அவர், அதில் நுழைக்கப் பிரத்யேக கார்டுகளையும் உருவாக்கினார். கார்டை நுழைத்தால் கொழுக்கட்டை வருவது போல இயந்திரத்தை வடிவமைத்தார்.

அதில் எண்களுக்குப் பதிலாக மன்னிப்பு, அன்பு, அமைதி, அறிவு, பக்தி, சேவை ஆகிய வார்த்தைகள் பொறிக்கப்பட்டன.

இதுகுறித்துப் பேசிய குல்கர்னி, ''கலாச்சாரத்தையும் தொழில்நுட்பத்தையும் ஒருங்கே கொண்டுசெல்ல மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சி இது'' என்றார்.

இந்த இயந்திரத்துக்கு ஏடிஎம் (Any Time Modak- எந்த நேரமும் கொழுக்கட்டை) என்றே பெயரிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE