இந்தியா

காவல் நிலையங்களில் 20% பெண் அதிகாரிகள்: பிஹார் டிஜிபி அறிவிப்பு

செய்திப்பிரிவு

பாட்னா: பிஹார் தலைநகர் பாட்னாவில் காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் மாநில டிஜிபி ஆர்.எஸ் பாட்டி பேசியதாவது:

பிஹார் காவல் துறையில் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கை 30,000-மாக அதிகரித்துள்ளது. இவர்களில் 233 பேர்காவல் நிலைய பொறுப்பாளர்களாக உள்ளனர். பெண் போலீஸ்அதிகாரிகளில் 20 சதவீதம் பேர் பிஹார் காவல் நிலையங்களுக்கு விரைவில் தலைமை தாங்குவர்.

பணியின்போது உயிரிழக்கும் போலீஸாரின் குடும்பத்துக்கான இழப்பீடு ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.1.5 கோடியாக உயர்த்த முயற்சி மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு டிஜிபி ஆர்.எஸ்.பாட்டி கூறினார்.

SCROLL FOR NEXT