அர்விந்த் கேஜ்ரிவால் கைது குறித்து கருத்து; அமெரிக்க தூதரக அதிகாரியை அழைத்து இந்தியா கண்டிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கைது விவகாரம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்த நிலையில் அந்நாட்டின் தூதரக அதிகாரியை அழைத்து இந்தியா தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த 22-ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அர்விந்த் கேஜ்ரிவால் கைது விவகார வழக்கு நியாயமாக நடைபெற வேண்டும் என்று நேற்று முன்தினம் அமெரிக்கா கருத்து தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று அமெரிக்காவின் இந்த கருத்துக்கு இந்தியா தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

இந்தியாவிலுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்துக்கு அமெரிக்க தூதரக அதிகாரி குளோரியா பெர்பெனாவை நேரில் அழைத்து இந்த கண்டனத்தை இந்திய அரசு பதிவு செய்துள்ளது. இந்தக் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

அமெரிக்க தூதரக அதிகாரி குளோரியா பெர்னெனாவுடனான, இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளின் சந்திப்பு சுமார் 40 நிமிட நேரம் நீடித்தது.

ஏற்கெனவே, முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது குறித்து ஜெர்மனி தூதரகத்தின் அதிகாரி ஜார்ஜ் என்ஸ்வெய்லர் கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

24 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

4 hours ago

கல்வி

5 hours ago

இந்தியா

5 hours ago

மேலும்