அமராவதி: வங்கக் கடலில் மிக்ஜாம் புயல்இன்று உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, புதுச்சேரி மற்றும் கடலோர ஆந்திர மாவட்டங்களான நெல்லூர், திருப்பதி, ஓங்கோல், பிரகாசம், குண்டூர், கிருஷ்ணா மற்றும் கோதாவரி மாவட்டங்களில் வரும் 6-ம் தேதி வரை மழை இருக்கும் என விசாகப்பட்டினம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி ஆந்திராவில் கடலோர மாவட்டங்களில் நேற்று பல இடங்களில் பலத்த மழையும், சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்தது.
புயலின் தாக்கத்தால், 140 ரயில்களை தென் மத்திய ரயில்வே துறை ரத்து செய்துள்ளதாக நேற்று அறிவித்துள்ளது. அதன்படி,பெங்களூரு-தனாபூர், கோயமுத்தூர்-பாராவுனி, நரசாபூர்-கோட்டயம், செகந்திராபாத்-கொல்லம், சென்னை சென்ட்ரல்-விஜயவாடா, ஹவுரா-பெங்களூரு, சென்னை நிஜாமுத்தீன் எக்ஸ்பிரஸ், கயா-சென்னை, கவுஹாத்தி-சென்னை, பெங்களூரு-கவுஹாத்தி, கோரக்பூர்-கொச்சிவேலி, ஹைதராபாத்-சென்னை,புதுடெல்லி-சென்னை, திருவனந்தபுரம்-சென்னை, மதுரை-நிஜாமுதீன், சென்னை-அகமதாபாத், நாகர்கோவில் - ஷாலிமார், சென்னை - சாப்ரா, மதுரை-சண்டிகர், செகந்திராபாத்-கூடூரு, விஜயவாடா-சென்னை, கூடூரு, விஜயவாடா, ஹைதராபாத்-தாம்பரம், சென்னை-பூரி, திருப்பதி - புவனேஸ்வர் உள்ளிட்ட 140ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென் மத்திய ரயில்வே தெரிவித்தது.