நிமோனியா பாதிப்பை போக்குவதற்காக ம.பி.யில் ஒன்றரை மாத குழந்தையின் உடலில் 40 முறை கம்பியால் சூடு

By செய்திப்பிரிவு

போபால்: மத்திய பிரதேசத்தின் ஷாதோல் மாவட்டத்தில் உள்ள ஹார்டி கிராமத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கின்றனர். இங்குள்ள பெதல்வாட்டி பைகா என்ற பெண்ணுக்கு ஒன்றை மாத குழந்தை உள்ளது.

குழந்தைக்கு கடந்த 4-ம் தேதி நிமோனியா (சளி காய்ச்சல்) பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு நோய்பாதிப்பு ஏற்பட்டால், அங்குள்ள பாரம்பரியமாக சிகிச்சை அளிக்கும் ‘டாய்’ என அழைக்கப்படும் செவிலியரிடம் செல்வது வழக்கம். அவர் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் பாதிப்பை குணப்படுத்த இரும்புக் கம்பியால் சூடு வைக்கும் சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

ஆகையால் பைகா என்ற பெண்ணும் தனது குழந்தையை ‘டாயி’டம் அழைத்துச் சென்றுள் ளார். சளி காய்ச்சல் பாதிப்பை போக்க ஒன்றைரை மாதகுழந்தைக்கு இரும்புக் கம்பியால் சூடு வைத்து அனுப்பியுள்ளார். நிமோனியா பாதிப்பு குறையாததால் பல நாட்களாக அந்த குழந்தைக்கு கை, கால், கழுத்து, வயிறு என உடலின் பல பகுதிகளில் 40 முறை இரும்புக் கம்பியால் சூடு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், காய்ச்சல் குறையவில்லை.

குழந்தையின் உடல்நிலை மோசமடைந்ததால், அந்த குழந்தையை ஷாதோல் பகுதியில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள்அதிர்ச்சி அடைந்தனர். பச்சிளம்குழந்தையின் உடல் முழுவதும் இரும்புக் கம்பியால் சூடு வைக்கப்பட்ட 40 தழும்புகள் இருந்தன. விசாரித்ததில் கிராமத்து பாரம்பரிய செவிலியரின் சூடு வைத்தியம் பற்றி கூறியுள்ளனர்.

அரசு மருத்துவமனையில் நிமோனியாவுக்கு முறையான சிகிச்சைஅளிக்கப்பட்டதால், தற்போது குழந்தையின் உடல் நிலை முன்னேற்றம் அடைந்து உள்ளது. பச்சிளம் குழந்தைக்கு சூடு வைக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதேபோல் சூடு வைத்தியம் அளித்த குழந்தை இறந்த சம்பவமும் இந்த கிராமத்தில் நடைபெற்றுள்ளது. இதையடுத்து சூடு வைத்து சிகிச்சை அளித்த பூட்டி பாய் பைகா என்ற பெண், குழந்தையின் தாய் பெதல்வாட்டி பைகா, குழந்தையின் தாத்தா ரஜானி பைகோ ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். பழைய சம்பவங்கள் குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

30 mins ago

தமிழகம்

33 mins ago

இந்தியா

37 mins ago

இந்தியா

48 mins ago

ஆன்மிகம்

59 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கல்வி

1 hour ago

மாவட்டங்கள்

1 hour ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்