எர்ணாகுளம்: கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், கொச்சியை அடுத்த களமசேரியில் கிறிஸ்தவர்களின் ஒரு பிரிவான ‘யெகோவாவின் சாட்சிகள் சபை’ சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அடுத்தடுத்து 3 குண்டுகள் வெடித்ததில் 12 வயது சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக, எர்ணாகுளத்தை சேர்ந்த டோமினிக் மார்ட்டின் (52) என்பவர் சரண் அடைந்தார்.
மார்ட்டினிடம் கேரள போலீ ஸாரும் என்ஐஏ மற்றும் என்எஸ்ஜி அதிகாரிகளும் பலசுற்று விசாரணை நடத்தினர்.இதையடுத்து டோமினிக் மார்ட்டின் நேற்று எர்ணாகுளத்தில் உள்ள மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 30 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.