இஸ்ரேல் பிரதமருக்கு குஜராத்தில் இன்று வரவேற்பு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு 6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத் செல்லும் நெதன்யாகுவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பிரதமர் மோடியும் உடன் செல்கிறார். விமான நிலையத்தில் இருந்து சபர்மதி ஆசிரமம் வரை இருவரும் திறந்த வாகனத்தில் செல்கின்றனர். இதற்காக, அவர்கள் செல்லும் பாதையில் 50 மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. குஜராத் மட்டுமின்றி பல மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் யூத இன மக்களும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

சபா்மதி ஆசிரமத்தை நெதன்யாகு பார்வையிடுகிறார். அங்கிருந்து அருகில் பல்வா நகரில் உள்ள தொழில் முனைவோர் வழிகாட்டு மையத்துக்கும் சபர்கந்தாவில் உள்ள விவசாய மையத்துக்கும் பிரதமர் மோடியுடன் நெதன்யாகு செல்கிறார். விவசாய ஆராய்ச்சி திட்டத்தை இருவரும் தொடங்கி வைக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE