187 - மானாமதுரை (தனி)

By செய்திப்பிரிவு

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
நாகராஜன் அதிமுக
ஆ.தமிழரசி திமுக
மாரியப்பன் கென்னடி அமமுக
சிவசங்கரி மக்கள் நீதி மய்யம்
ம.சண்முகப்பிரியா நாம் தமிழர் கட்சி

மானாமதுரை ரயில்வே சந்திப்பு, இடைக்காட்டூர் திருஇருதய ஆண்டவர் ஆலயம் போன்றவை உள்ளன. 1952-லிருந்து 1971-வரை பொதுத்தொகுதியாக இருந்தது. 1977-லிருந்து தனித்தொகுதியாக மாறியது. 2011-ல் தொகுதி மறுசீரமைப்பில் இளையான்குடி தொகுதி கலைக்கப்பட்டு மானாமதுரை தொகுதியோடு சேர்ந்தது.

தற்போது, மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி (தாலுகாக்கள்) ஆகிய ஒன்றியங்கள், பேரூராட்சிகள் உள்ளன.

மதுரையை ஒட்டி இத்தொகுதி உள்ளதால், தனியார் கல்வி நிறுவனங்கள் இங்கு ஏராளமான பொறியியல் கல்லூரிகளை துவக்கியுள்ளனர்.

இங்கு முக்குலத்தோர், தாழ்த்தப்பட்டோர், யாதவர், பிள்ளைமார், இஸ்லாமியர், முத்தரையர், கிறிஸ்தவர் உள்ளனர்.

தொகுதி பிரச்சினைகள்

சிவகங்கை மாவட்டத்தில் வைகை ஆறு பாயும் பகுதி மானாமதுரை தொகுதி. ஆறு இருந்தும் விவசாயம் செழிக்கவில்லை. ஆற்றில் மணல் கொள்ளை காரணமாக கண்மாய்களுக்கு செல்லும் கால்வாய்கள் மேடாகி தண்ணீர் செல்ல வழியின்றி விவசாயம் பாதித்துள்ளது. ஆற்றில் சீமைக்கருவேல்மரங்கள் வளரும் அளவுக்கு மணல் கொள்ளையும், அரசு குவாரியும் இயங்கியது. குறிப்பிட்டுச் சொல்லும் படியான தொழில்கள் இல்லை. மானாமதுரையில் சீமைக்கருவேல் மரக்கரி உற்பத்தி செய்வது குடிசைத்தொழில் போல் நடக்கின்றன.

தேர்தல் வரலாறு

1952 முதல் 14 தேர்தல்களை சந்தித்த இத்தொகுதியில், மூன்று முறை காங்கிரஸ் கட்சியும், சுதந்திரா கட்சி இரண்டு முறையும், திமுக இரண்டு முறையும், அதிமுக நான்கு முறையும், தமாகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சுயேச்சை தலா ஒருமுறையும் வெற்றிபெற்றுள்ளன.

2006, 2011 ஆகிய இரு தேர்தல்களில் எம்.குணசேகரன் (அதிமுக) வென்றார். 2016 தேர்தலில் எஸ்.மாரியப்பன் கென்னடி (அதிமுக), 2019 இடைத்தேர்தல் எஸ்.நாகராஜன் (அதிமுக)

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

மானாமதுரை வட்டம், இளையான்குடி வட்டம் மற்றும் திருப்புவனம் வட்டம்.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,32,393

பெண்

1,35,454

மூன்றாம் பாலினத்தவர்

5

மொத்த வாக்காளர்கள்

2,67,943

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

சோ.மாரியப்பன்கென்னடி

அதிமுக

2

எஸ்.சித்ராசெல்வி

திமுக

3

அ.தீபா என்ற திருமொழி

விசிக

4

ரா.மலைச்சாமி

பாமக

5

மு.ராஜேந்திரன்

பாஜக

6

சே.சத்யா

நாம் தமிழர்

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1952 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்ற வேட்பாளர்

கட்சி

வாக்கு விழுக்காடு

2011

எம். குணசேகரன்

அதிமுக

2006

எம். குணசேகரன்

அதிமுக

48.87

2001

K.பாரமலை

தமாகா

57.06

1996

K.தங்கமணி

இந்திய கம்யூனிச கட்சி

49.82

1991

V.M.சுப்பிரணியன்

அதிமுக

69.77

1989

P.துரைபாண்டியன்

திமுக

36.08

1984

K.பாரமலை

இ.தே.கா

61.67

1980

K.பாரமலை

சுயேட்சை

50.52

1977

V.M.சுப்பிரணியன்

அதிமுக

40.23

1971

T.சோனையா

திமுக

1967

K.சீமைச்சாமி

சுதந்திராக் கட்சி

1962

K.சீமைச்சாமி

சுதந்திராக் கட்சி

1957

R.சிதம்பரபாரதி

இந்திய தேசிய காங்கிரசு

1952

கிருஸ்ணசாமிஐயங்கார்

இந்திய தேசிய காங்கிரசு

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

எம். குணசேகரன்

அ.தி.மு.க

53492

2

K. பரமாலை

காங்கிரஸ்

42037

3

P. மாயாண்டி

தி.மு.க

9020

4

R. அய்யாதுரை

பாஜக

1222

5

K. ஆறுமுகம்

டி.என்.ஜே.சி

1218

6

K. கமலக்கண்ணன்

சுயேச்சை

1091

7

R. ஆழ்வார்சாமி

பகுஜன் சமாஜ் கட்சி

692

8

C. ராமச்சந்திரன்

சுயேச்சை

686

109458

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

எம். குணசேகரன்

அ.தி.மு.க

83535

2

A.தமிழரசி

தி.மு.க

69515

3

K.முருகவேல்ராஜன்

பகுஜன் சமாஜ் கட்சி

2883

4

O.வேல்முருகன்

சுயேச்சை

1766

5

V.விஸ்வநாதகோபால்

பாஜக

1185

6

R.ஐய்யனார்

சுயேச்சை

1135

7

K.சுரேஷ்

சுயேச்சை

791

8

M.குருதிவேல்மாரன்

சுயேச்சை

438

9

K.குணசேகரன்

சுயேச்சை

378

161626

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 mins ago

தொழில்நுட்பம்

50 mins ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்