179 - விராலிமலை

By செய்திப்பிரிவு

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
டாக்டர் விஜயபாஸ்கர் அதிமுக
எம்.பழனியப்பன் திமுக
ஒ.கார்த்தி பிரபாகரன் அமமுக
சரவணன் ராமதாஸ் மக்கள் நீதி மய்யம்
அ.அழகுமீனா நாம் தமிழர் கட்சி

சட்டப்பேரவைத் தொகுதி மறு சீரமைப்பின் மூலம் கடந்த 2011-ல் புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை தொகுதி உருவாக்கப்பட்டது.

“குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்” என்ற சொல்லுக்கு ஏற்ப மலை மீது அமைந்துள்ள முருகன் கோயில் விராலிமலை தொகுதிக்கு சிறப்பு மிக்கதாகும்.

அருணகிரிநாதரால் பாடல் பெற்ற இத்தலத்தில் ஆண்டுக்கு 2முறை திருவிழா நடைபெறும். விராலிமலையானது தமிழகத்தில் மயில்கள் அதிகமுள்ள இடமென்ற வரலாறும் உள்ளது.

கொடும்பாளூரில் தொல்லியல் துறையின் கண்காணிப்பில் உள்ள பழமைமிக்க மூவர் கோயில் சிற்பக்கலைக்கு புகழ்பெற்றது. சித்தன்னவாசல் ஓவியக்கலைக்கு சான்றாக உள்ளது.

குடுமியான்மலையில் உள்ள சிவன்கோயிலில் இந்தியாவில் வேறெங்கும் இல்லாத வகையில் கர்நாடக சங்கீததுக்கான கல்வெட்டு உள்ளது.

விராலிமலை ஒன்றியத்தில் விராலிமலை, மாத்தூர், மண்டையூர் ஆகிய இடங்களில் பெரிய நிறுவனங்களின் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.

குடுமியான்மலையில் உள்ள பண்ணையில் இருந்து தமிழக விவசாயிகளுக்கு தேவையான நுண்ணூட்டம் தயாரிக்கப்படுகிறது. இங்கு புதிதாக வேளாண் கல்லூரியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அன்னவாசல், குடுமியான்மலை, நார்த்தாமலை, பொம்மாடிமலை பகுதியில் உள்ள மலைகளில் இருந்து கிரானைட் வெட்டி எடுக்கப்படுகிறது.

இத்தொகுதியில் முக்குலத்தோர், கவுண்டர், முத்தரையர், ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கின்றனர்.இத்தொகுதியில் விராலிமலை வட்டம்,இலுப்பூர் வட்டத்தில் கோமங்கலம் தவிர மற்ற கிராமங்களும், குளத்தூர், திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகாவில் சில கிராமங்களும் உள்ளன.

கோரிக்கைகள்:

இங்கு, அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும். இந்த பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் தினக்கூலி அடிப்படையிலேயே இப்பகுதியை சேர்ந்தவர்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்களை நிரந்தரப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். விராலிமலை பகுதியில் மயிலுக்கு சரணாலயம் அமைக்க வேண்டும்.

அன்னவாசல் பகுதியில் அரசு சார்பில் கிரானைட் தொழிற்சாலை அமைக்க வேண்டும். நலிவடைந்த வைர தொழிலுக்கு புத்துயிர் ஊட்ட வேண்டும் என்பவை இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும்.

விராலிமலை தொகுதியில் 2016-ம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் 84,701 வாக்குகளும், திமுக வேட்பாளர் எம்.பழனியப்பன் 76,254 வாக்குகளும் பெற்றனர்.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,10,810

பெண்

1,13,723

மூன்றாம் பாலினத்தவர்

17

மொத்த வாக்காளர்கள்

2,24,550

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

சி. விஜயபாஸ்கர்

அதிமுக

2

மு. பழனியப்பன்

திமுக

3

ஆர். கார்த்திகேயன்

தேமுதிக

4

ஜி. கனகராஜ்

பாமக

5

சி. முத்துக்குமார்

ஐஜேகே

6

கே. ஸ்ரீதர்

நாம் தமிழர்

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

இலுப்பூர் தாலுகா (கோமங்கலம் கிராமம் தவிர)

குளத்தூர் தாலுகா (பகுதி)

குமாரமங்கலம், மாத்தூர், சிங்கத்தாக்குறிச்சி, செங்கலாக்குடி , மண்டையூர், லெட்சுமணபட்டி, மேட்டுபட்டி, சிவகாமிபுரம், தென்னதிராயன்பட்டி, பாலாண்டாம்பட்டி, களமாவூர், நீர்ப்பழனி, ஆம்பூர்பட்டி , மதயாணைப்பட்டி, சூரியூர், பேராம்பூர் , ஆலங்குடி, வெம்மணி, வடுகபட்டி, மேலப்புதுவயல், குளத்தூர் மற்றும் ஒடுக்கூர் கிராமங்கள்.

மணப்பாறை தாலுக்கா (பகுதி) (திருச்சிராப்பள்ளி மாவட்டம்) ** கவிநாரிப்பட்டி, புத்தாக்குடி, கப்பக்குடி கிராமங்கள். (**கவிநாரிப்பட்டி, புத்தாக்குடி, கப்பக்குடி, ஆகிய கிராமங்கள் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தின் கீழ்வந்தாலும், கள மற்றும் பூகோள ரீதியாக விராலிமலை சட்டமன்ற தொகுதியின் எல்லைப்பரப்பிற்குள் வருகிறது)

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

விஜயபாஸ்கர்.C

அதிமுக

77285

2

ரெகுபதி.S

திமுக

37976

3

பழனியப்பன்.M

சுயேச்சை

15397

4

சவரிமுத்து.Y

ஐஜேகே

2639

5

அழகு.P

சுயேச்சை

1404

6

ராஜா.P

சுயேச்சை

1403

7

பழனியப்பன் (எ) புரட்சிகவிதாசன்

சுயேச்சை

1144

8

ரமேஷ்.M

சுயேச்சை

774

138022

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 mins ago

க்ரைம்

13 mins ago

சுற்றுச்சூழல்

49 mins ago

க்ரைம்

53 mins ago

இந்தியா

51 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்