காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளைக் கொண்ட இந்தப் பகுதியின் முதன்மையான தொழில் விவசாயம். கரூர் பகுதியில் உள்ள ஜவுளி ஆலைகளும் முக்கியத் தொழில்.
கரூர் மாவட்டத்தின் மூன்று தொகுதிகளுடன், திருச்சி மாவட்டத்தின் மணப்பாறை, திண்டுக்கல் மாவட்டத்தின் வேடசந்தூர், புதுக்கோட்டை மாவட்டத்தின் விராலிமலை சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியது கரூர் மக்களவைத் தொகுதி. 4 மாவட்டங்களில் பரவிக் கிடப்பதால் மிகப்பெரிய தொகுதியாக கரூர் காட்சி அளிக்கிறது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மு. தம்பிதுரை (அதிமுக), எஸ்.ஜோதிமணி (காங்கிரஸ்), என். தங்கவேல் (அமமுக), ஹரிஹரன் (மநீம), கருப்பையா (நாம் தமிழர்) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பலமுறை போட்டியிட்ட தொகுதி. திமுகவிலும், சின்னசாமி, கே.சி. பழனிசாமி என பிரபலமான வேட்பாளர்களே ஒவ்வொரு முறையும் களம் கண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் திராவிடக் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களையே இந்தப் பகுதி மக்கள் அதிக முறை தேர்வு செய்துள்ளனர்.
ஆனால் இம்முறை அதிமுகவின் தம்பிதுரைக்கு சவாலான போட்டியாளராக இருக்கிறார் காங்கிரஸின் ஜோதி மணி.
ஜோதி மணிக்கு ஆதரவாக செந்தில் பாலாஜி தீவிரமாக களத்தில் இறங்கி தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து வருவதால் ஜோதி மணிக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. மேலும் கடந்த வருடங்களில் தம்பிதுரை இந்தத் தொகுதிக்கு எதும் செய்யவில்லை என்ற எண்ணம் பெரும்பாலான மக்களிடம் இருப்பதால் தம்பிதுரைக்கு சிறிது பின்னடைவு ஏற்படலாம். எனினும் கடைசி நேரத்தில் கணிப்புகள் மாறலாம் என கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
தொகுதி குறித்த கருத்துக் கணிப்பு
அதிமுக மூத்த தலைவர், மக்களவை துணை சபாநாயகரா இருந்த தம்பிதுரையும், ராகுல் காந்தியின் நம்பிக்கை பெற்ற ஜோதிமணியும் நேரடியாக மோதும் தொகுதி கரூர். அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜியின் களப்பணியும், வியூகங்களும் ஜோதிமணிக்குப் பெரிதும் கைகொடுப்பதாக அவருக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. தம்பிதுரை இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். நாம் தமிழர் கருப்பையா 3-வது இடத்தில் உள்ளார். 4-வது இடத்தில் அமமுக தங்கவேல் உள்ளார்.
முக்கிய குறிப்பு:
இது தொகுதிவாரியான வாக்காளர்கள் அளித்துள்ள வாக்கு விகிதம் அல்ல. கட்சி அல்லது வேட்பாளர் மீது அபிமானம் கொண்டவர்கள் எங்கிருந்தாலும் இந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளலாம் என்பதால், குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளருக்கு ஆதரவான/எதிப்பான இணையதள வாசகர்களின் மனநிலையையே இந்த வாக்களிப்பு காட்டுகிறது. அதை மனதில் கொண்டு இந்த முடிவுகளை அணுகும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
மற்ற தொகுதிகள் குறித்த விவரங்கள காண: