43 - வேலூர்

வேலூர் மாவட்டத்தின் தலைநகர் தொகுதியாக வேலூர் உள்ளது. முதல் இந்திய சுதந்திர போராட்டத்துடன் தொடர்புடைய பிரம்மாண்ட கோட்டை, சிஎம்சி மருத்துவமனை உள்ளிட்டவை தொகுதியின் அடையாளம். வேலூர் தொகுதியின் பெரும்பான்மை வாக்காளர்கள் வேலூர் மாநகராட்சிக்குள் வந்துவிடுகிறார்கள்.

வேலூர் நகருக்கு கல்வி, மருத்துவம் மற்றும் சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. மாவட்ட தலைநகரம் என்பதால் அதிகப்படியான மக்கள் நடமாட்டம், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பயணத்தில் ஓய்வு எடுக்கும் நகரமாக இருக்கிறது.

தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருப்பது போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண சுற்றுச்சாலை, வேலூர் ரயில் நிலையம் மற்றும் கஸ்பா அருகே ரயில்வே மேம்பாலம், அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி வரை டவுன் பேருந்துகள் இயக்க வேண்டும், சத்துவாச்சாரி பகுதியில் இருந்து வேலூர் புதிய பேருந்து நிலையம் வழியாக காட்பாடி ரயில் நிலையம் வரை சர்க்குலர் பேருந்துகள், நகரில் நிலவும் குப்பை அகற்றும் பிரச்சினைக்கு தீர்வு காண்பது, புதிய பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

கடந்த 1952 முதல் 14 சட்டப்பேரவை தேர்தலை வேலூர் சந்தித்துள்ளது. முதல் தேர்தல் இரட்டை வாக்குரிமை அடிப்படையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாசிலாமணி, எச்.எம்.ஜெகன்நாதன் ஆகியோர் வெற்றிபெற்றனர்.

இதுவரை நடந்து முடிந்துள்ள தேர்தலில் காங்கிரஸ் 5, திமுக 6, அதிமுக 2, தமாகா ஒரு முறை வெற்றிபெற்றுள்ளனர். 1991 முதல் தொடர்ந்து 4 முறை திமுக, அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் தமாகா சார்பில் போட்டியிட்ட ஞானசேகரன் வெற்றிபெற்றார். 2011 தேர்தலில் ஐந்தாம் முறையாக திமுக கூட்டணியில் போட்டியிட்ட ஞானசேகரன், அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.எஸ்.விஜய்யிடம் தோல்வி அடைந்தார்.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

ஆருண் ரஷீத்

அதிமுக - மனிதநேய ஜனநாயக கட்சி

2

பி.கார்த்திகேயன்

தி.மு.க

3

ஏ.ஆர்.அப்துர் ரஹ்மான்

விசிக - ம.ந.கூட்டணி)

4

டி.லட்சுமி நாராயணன்

பாமக

5

எஸ்.இளங்கோவன்

பாஜக

6

ஏ.மணிகண்டன்

நாம் தமிழர்



தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

வேலூர் வட்டம் (பகுதி)

சம்பங்கிநல்லூர், வெங்கடாபுரம், பெருமுகை மற்றும் அலமேலுமங்காபுரம் கிராமங்கள், கொணவட்டம் (சென்சஸ் டவுன்), தொரப்பாடி (பேரூராட்சி), சத்துவாச்சரி (பேரூராட்சி), வேலூர் (நகராட்சி), அல்லாபுரம் (பேரூராட்சி).

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,21,706

பெண்

1,27,735

மூன்றாம் பாலினத்தவர்

14

மொத்த வாக்காளர்கள்

2,49,455

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள்

ஆண்டு

வெற்றிபெற்றவர்

கட்சி

1952

மாசிலாமணி செட்டி மற்றும் ஜெகன்நாதன்

இந்திய தேசிய காங்கிரஸ்

1957

சாரதி

கட்சி சாராதவர்

1962

ஜீவரத்தினம் முதலியார்

இந்திய தேசிய காங்கிரஸ்

1967

சாரதி

திராவிட முன்னேற்றக் கழகம்

2006 சட்டமன்ற தேர்தல்

43. வேலூர்

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

C. ஞானசேகரன்

ஐ.என்.சி

63957

2

N. சுப்பிரமணி

மதிமுக

42120

3

G.G. ரவி

எஸ்.பி

15710

4

A. ராஜேந்திரன்

தே.மு.தி.க

9549

5

K. கலைசெல்வி

பி.ஜே.பி

2161

6

P.P. ஜெயப்பிரகாஷ்

சுயேச்சை

595

7

J. பாபு

சுயேச்சை

317

8

S. சல்மா

சுயேச்சை

291

9

V. வாசுகி

சுயேச்சை

285

10

B. கார்த்திகேயன்

சுயேச்சை

212

11

E. நிதிவேந்தன்

சுயேச்சை

162

135359

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 சட்டமன்ற தேர்தல்

43. வேலூர்

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

வி. எஸ். விஜய்

அ.தி.மு.க

71522

2

ஞானசேகரன்

காங்கிரஸ்

56346

3

ஹசன் J

சுயேச்சை

5273

4

அரவீந்த் .V

பிஜேபி

4334

5

ஏழுமலை V.S

சுயேச்சை

1333

6

பாபு .J

சுயேச்சை

628

7

சண்முகம் .D

சுயேச்சை

454

8

ஞானசேகர் .P

சுயேச்சை

304

9

நீவேதகுமார் .R

சுயேட்சை

274

10

நீதிவேந்தன் .E

சுயேச்சை

272


VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE