திருச்சி

திருச்சிராப்பள்ளி மாவட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கை

செய்திப்பிரிவு

1. தொட்டியம் ஒன்றியம் காட்டுப்புத்தூரில் வாழை பதப்படுத்தும் கிடங்கு அமைக்கப்படும்.

2. திருச்சி நவல்பட்டில் அமைந்துள்ள தகவல் தொழில் நுட்பப் பூங்காவைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

3. திருச்சி புத்தூரில் இருந்து சோமரசம்பேட்டைக்குச் செல்லும் சாலை அகலப்படுத்தப்படும்.

4. திருச்சி நகரின் மையப்பகுதியில் நெருக்கடிக்கு இடையில் உள்ள காந்தி சந்தையை வேறு ஒரு வசதியான இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

5. திருச்சி பால்பண்ணை முதல் துவாக்குடி வரை அணுகுசாலை (ளுநசஎiஉந சுடியன) அமைக்கப்படும்

6. திருச்சியில் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்துப் பரிசீலனை செய்து அவற்றிற்குத் தீர்வு காண்பதற்காக அரசு, பெல் நிறுவனம் , சிறு தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கொண்ட ஒரு, நிலைக்குழு அமைக்கப்படும்.

7. மணப்பாறையில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும்.

8. மண்ணச்சநல்லூரில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும்.

9. மண்ணச்சநல்லூரில் நவீன வசதிகளுடன் பேருந்து நிலையம் அமைக்கப்படும்.

10. துறையூரில் புறவழிச்சாலை அமைக்கப்படும்.

11. உப்பிலியாபுரம் ஒன்றியத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்படும்.

12. உப்பிலியாபுரம் ஒன்றியத்தில் நெல் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்கப்படும்.

13. துறையூர் அரசுப் பொது மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் வசதிகள் செய்து தரப்படும்.

14. திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை துவாக்குடி சுங்கவரி சாலையிலிருந்து வாழவந்தான் கோட்டை – சர்க்கார் பாளையம் வழியாக திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலைக்குச் சுற்றுச் சாலை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

15. தொட்டியத்தில் வாழை வணிக வளாகம் அமைக்கப்படும்.

16. அன்பில் நகரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவசர சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டு தரம் உயர்த்தப்படும்.

17. திருச்சி - துறையூர் நெடுஞ்சாலையில் உள்ள மண்ணச்சநல்லூருக்கு புறவழிச்சாலை அமைக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

18. திருச்சி நகரில் மலர் சந்தை அமைக்கப்படும்.

SCROLL FOR NEXT