சேலம்

சேலம் மாவட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கை

செய்திப்பிரிவு

1. ஓமலூர் ஒன்றியம் பொட்னேரி ஏரிக்குக் காவிரி ஆற்றிலிருந்து கூடுதலாக வரும் தண்ணீரை நீரேற்றம் செய்து, ஓமலூர் வட்டத்தில் உள்ள 20 ஏரிகளுக்கு நீர்ப் பாசன வசதி செய்து தரப்படும்.

2. தொப்பையாறு பகுதியில் நீரேற்றம் செய்து மேச்சேரி ஏரி, ராயப்பன் ஏரி, மானத்தால் ஏரி, அமரகுந்தி, பெரியேரிப்பட்டி, கருக்குப்பட்டி, ரெட்டிப்பட்டி, அம்மன் கோவில்பட்டி, காடம்பட்டி, புதூர் காடம்பட்டி, முத்துநாயக்கன்பட்டி, மாரமங்கலத்துப்பட்டி, தாரமங்கலம், பவளத்தானுர் ஆகிய ஏரிகள் நிரப்பப்படும்.

3. மேட்டூர் தொகுதியில் மின் நகர் – புதுச்சாம்பள்ளியில் இரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.

4. காவிரி ஆற்று உபரி நீர் 16 கண் பாலம் அருகிலிருந்து எடப்பாடி வட்டம் பக்கநாடு, ஆடையூர், இருப்பாளி வழியாகக் கால்வாய் மூலம் சரபங்கா ஆற்றில் விடப்பட்டு எடப்பாடி, சங்ககிரி தொகுதிகளில் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும்.

5. மேட்டூரில் உள்ள அனல்மின் நிலையத்தில் இருந்து வெளியாகும் நீர் நங்கவள்ளி, வனவாசி, குப்பம்பட்டி, ஜலகண்டபுரம் பகுதிகளில் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும்.

6. வனவாசி, தானாதியூர், மூலக்காடு வழியாக மேட்டூர் அனல்மின் நிலையத்திற்குத் தரமான சாலை அமைக்கப்படும்.

7. எருமாபாளையத்தில் உள்ள சாயநீர்ப் பொது சுத்திகரிப்பு ஆலை செயல்பாட்டிற்கு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

8. சங்ககிரி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு அங்கு அவசர சிகிச்சைப் பிரிவு தொடங்கப்படும்.

9. சங்ககிரி பேரூராட்சியில் புள்ள கவுண்டம்பட்டி கூட்டுக் குடிநீர்த் திட்டம் தொடங்கப்படும்.

10. சங்ககிரியில் இரயில்வே மேம்பாலம் அமைத்துத் தரப்படும்.

11. முந்தைய கழக ஆட்சியில் திறந்து வைக்கப்பட்டு, தற்போது அ.தி.மு.க அரசால் பயன்படுத்தப்படாமல் உள்ள சங்ககிரி பேருந்து நிலையம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

12. ஓமலூர் - மேச்சேரி பிரிவு சாலை , தொளசம்பட்டி , பெரமச்சூர் , ஆனக்கவுண்டம்பட்டி , மாங்குப்பை ஆகிய இடங்களில் இரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படும்.

13. சங்ககிரி வட்டம் எர்ணாபுரம், தப்பக்குட்டை, புதூர், கூடலூர் ஆகிய கிராமங்களில் நத்தம் புறம்போக்கு நிலங்களில், வசித்து வருபவர்களுக்கு இலவசப் பட்டா வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும்.

14. கொங்கணாபுரம் ஒன்றியத்தில் வேளாண் பொருட்கள் விற்பனை மையம் அமைக்கப்படும்.

15. வீரபாண்டி தொகுதி, பனைமரத்துப்பட்டி ஒன்றியம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஊராட்சி, ராஜாராம் காலனி தோப்புப் புறம்போக்கில் வாழ்ந்துவரும் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த 300 குடும்பங்களுக்குப் பட்டா வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்.

16. பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் சிவன் கோவிலில் இருந்து, முருகன் கோவில் வழியாக வசிஷ்ட நதி குறுக்கே பாலம் அமைக்கப்படும்.

17. சேலம் லீபஜார் மற்றும் செவ்வாய்ப்பேட்டையில் ரயில்வே மேம்பாலப் பணி துரிதப்படுத்தப்படும்.

18. கழக ஆட்சியில் சேலத்தில் துவக்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டுள்ள தகவல் தொழில் நுட்பப் பூங்காப் பணிகள் முழுமையாக முடிக்கப்படும்.

19. ஆத்தூர் தொகுதியில் ராமநாயக்கன் பாளையம் கல்ராயன் மலைஅடிவரத்தில் கல்லாறு நீர்த் தேக்கம் அமைக்கப்படும்.

20. தலைவாசல் காய்கறி தினசரி சந்தைக்குத் தேவையான இடவசதியும் குளிர்பதனக் கிடங்கு வசதியும் செய்து தரப்படும்.

21. சங்ககிரி - குப்பனூர் புறவழிச் சந்திப்பில் மேம்பாலம் அமைத்துத் தரப்படும்.

22. சேலத்தில் உள் விளையாட்டுத் திடல்களுடன் கூடிய விளையாட்டு அரங்கம் அமைத்துத் தரப்படும்.

23. முந்தைய கழக ஆட்சியில் தொடங்கப்பட்டு, அ.தி.மு.க அரசால் கிடப்பில் போடப்பட்டுள்ள ஆத்தூர் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றித் தரப்படும்.

24. கச்சிரப்பாளையம் அணையின் உபரிநீர் விவசாயத்திற்காக அதிகம் பயன்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

25. தமிழ்நாடு மீன் வளர்ப்பு மற்றும் விற்பனைக் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்களைக் கொண்டு மீன் பிடிப்பு மற்றும் விற்பனைப் பணியை மீண்டும் தொடர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

26. மேச்சேரியில் தக்காளி ஜுஸ் தொழிற்சாலை அமைக்கப்படும்.

27. சங்ககிரியில் அனைத்து வசதிகளுடன் கூடிய லாரி நிறுத்துமிடம் அமைக்கப்படும்.

28. காக்காப்பாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைத்துத்தரக் கோரும் கோரிக்கை பரிசீலிக்கப்படும்.

29. சேலத்தில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும்.

SCROLL FOR NEXT