கடலூர்

152 - விருதாச்சலம்

செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் ஒன்று விருத்தாசலம். மாவட்டத்திலேயே அதிக வருவாய் கிராமங்களையும், அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக விளங்கிய விருத்தாசலம் 2011-ல் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பின் போது கெங்கைகொண்டான், பெண்ணாடம் பேரூராட்சிகள், கம்மாபுரம் மற்றும் நல்லூர் ஒன்றியங்கள் பாதியாக பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இத்தொகுதியில் விருத்தாசலம் நகராட்சி, மங்கலம்பேட்டை பேரூராட்சி மட்டுமே உள்ளது.கார்குடல், பாலக்கொல்லை, ஆலடி, பெரியவடவாடி உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட ஊராட்சி அமைப்புகள் உள்ளன.

மிகவும் பழமைவாய்ந்த பழமலை நாதர் ஆலயம், 5 கோபுரங்களைக் கொண்ட விருத்தகிரீஸ்வரர் கோயில், ஒரு அரசுக் கலைக் கல்லூரி, தமிழகத்திலேயே வேறெங்கும் இல்லாத பீங்கான் தொழில்நுட்பக் கல்லூரி உள்ளிட்டவை விருத்தாசலத்துக்கு சிறப்பு சேர்க்கின்றன. அரசு பள்ளிகளுக்கு இணையாக தற்போது தனியார் பள்ளிகள் அதிகரித்துவருகிறது. மாவட்டத்திலேயே அதிக ரயில் போக்குவரத்து தடங்கள் நிறந்ததாக விருத்தாசலம் ஜங்ஷன் விளங்குகிறது.அதிக அளவில் கிராமப்புறங்களை உள்ளடக்கிய விருத்தாசலம் தொகுதியில் இந்துக்கள் அதற்கடுத்தபடியாக முஸ்லிம்கள் அதிகப்படியாக வசிக்கின்றனர்.முற்றிலும் விவசாயம் சார்ந்த பகுதியாக விளங்குவதால் ஏராளமான விவசாயிகளும், விவசாயக் கூலித் தொழிலாளர்களும், வியாபாரிகள் உள்ளிட்டோர் வசிக்கின்றனர்.

இந்தத் தொகுதியில் நீண்ட கால பிரச்சினைகளுக்குக் குறைவில்லை. இதுவரை நடைபெற்ற 14 தேர்தல்களில் இத்தொகுதியில் தேர்ந்தெடுக்கப்படுவோர் பெரும்பாலும் எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்துவருவது தான் இத்தொகுதியின் சாபக்கேடு எனக் கூறலாம். இந்தத் தொகுதியில் 90 சதவிகதம் பேர் விவசாயத் தொழிலை சார்ந்திருப்பதால், விவசாயத்துக்கு ஆதாரமான தண்ணீர் தேவைக்கு யாரும் கவனம் செலுத்தவில்லை.இத்தொகுதியில் உள்ள மணிமுத்தாறு வற்றிய நிலையிலும், கழிவுநீர் வாய்க்காலாகவும் மாறிவருகிறது.அரசு சார்பில் சிட்கோ உருவாக்கப்பட்டு அங்கு பீங்கான் உற்பத்திக் கூடங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் அவை தற்போது முடங்கும் அபாயத்தில் இருப்பதோடு, பீங்கான் தொழில்நுட்பக் கல்லூரியும் கவனிப்பாற்ற நிலையில் இயங்கிவருகிறது. மாவட்டத் தலைநகர் கடலூரிலிருந்து 60 கி.மீ தொலையில் உள்ள அரசு சார்ந்த திட்டங்கள் ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் இருப்பதாகவும், சாலை வசதிகள் மிக மோசமான நிலையில் இருப்பதாகவும் தொகுதி வாசிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களே இத்தொகுதியில் வெற்றிபெறுவதால் தொகுதியில் போதிய வளர்ச்சிப் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல் மிகவும் பின்தங்கிய தொகுதியாக இருப்பதாக தொகுதி வாசிகள் தெரிவிக்கின்றனர்.

விருத்தாசலம் சட்டப்பேரவை தொகுதியில் 1952 முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த 14 தேர்தல்களில் 4 முறை காங்கிரஸ்,திமுக, அதிமுக,தேமுதிக தலா 2 முறையும், உழைப்பாளர் கட்சி, ஜனதா பார்ட்டி, பாமக மற்றும் சுயேட்சை உள்ளிட்டவை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. 2006-ல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்தும், 2011-ல் நடைபெற்ற தேர்தலில் அதேக் கட்சியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரும் வெற்றிபெற்றனர்.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

வி.டி.கலைச்செல்வன்

அதிமுக

2

பாவாடை கோவிந்தசாமி

திமுக

3

வி.முத்துக்குமார்

தேமுதிக

4

ப.தமிழரசி

பாமக

5

சி.செல்லத்துரை

ஐஜேகே

6

வி.சிவராஜ்

நாம் தமிழர்

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

விருத்தாசலம் வட்டம் (பகுதி)

சேதுவராயன்குப்பம், எ,மரூர், மாளிகைமேடு, கொத்தனூர் (பாந்தவன்பட்டு), ஆதியூர், கொளப்பாக்கம் (இரஞ்சி), ஐவதுகுடி, இலங்கியனூர், வலசை, சுருவம்பூர், டி.மாவீடந்தல், காட்டுப்பாரூர், விசலூர், கர்நத்தம், கோவிலானூர், பள்ளிபட்டு, ரூபநாராயணநல்லூர், கோ.பூவனூர், கட்டியநல்லூர், கோ.பவளங்குடி, புலியூர், பாலக்கொல்லை, நடியப்பட்டு, முடப்புளி, இருப்பு, இருளாக்குறிச்சி, மனக்கொல்லை, ஆலடி, மாத்தூர், பெரியவடவாடி, விஜயமாநகரம், அகரம், பரூர், இடைச்சித்தூர், பிஞ்சனூர், மேமாத்தூர், வண்ணாத்தூர், நல்லூர், நகர், சேப்ப்பாக்கம். காட்டுமயினூர், கீழக்குறிச்சி, மேலக்குறிச்சி, பெரியநெசலூர், சீறுநெசலூர், வேப்பூர், நாரயூர், திருப்பெயூர், கோ.கொத்தனூர், சித்தூர், சாத்தியம். கச்சிபெருமாநத்தம். சின்னபரூர், எருமனூர், சின்னவடவாடி, செம்பளாக்குறிச்சி, கவணை, சித்தேரிக்குப்பம், இருசாலக்குப்பம், பழையபட்டிணம். கோட்டேரி, பெரியகாப்பான்குளம். சின்னகாப்பான்குளம், கொல்லிருப்பு, அம்மேரி, முதனை, நரிமனம், கச்சிராயநத்தம், கோபுராபுரம். காணாதுகண்டான், சின்னபண்டாரன்குப்பம், குப்பநத்தம், புதுக்கூரைப்பேட்டை, மணவாளநல்லூர், கோமங்களம், பரவளுர், தொரவளுர், விளாங்காட்டூர், படுகளாநத்தம், கீரம்பூர், மன்னம்பாடி, டி.பௌடையூர், வரம்பனூர், கலியாமேடு, பூலம்பாடி, நிராமணி, எடையூர், பெரம்பலூர், கொடுக்கூர், முகுந்தநல்லூர், சாத்துக்குடல் (மேல்பாதி), சாத்துக்குடல் (கீழ்பாதி), கா.இனமங்களம், ஆலிச்சிக்குடி, நேமம், கருவேப்பிலங்குறிச்சி, பேரளையூர், ஆலந்துரைபட்டு, சத்தியவாடி, பி.கொல்லத்தன்குறிச்சி, தெற்குவடக்குபுத்தூர், வேட்டக்குடி, வண்ணான்குடிகாடு, ராஜேந்திரபட்டிணம் மற்றும் சின்னாத்துக்குறிச்சி கிராமங்கள்.

மங்களம்பேட்டை (பேரூராட்சி) மற்றும் விருத்தாச்சலம் (நகராட்சி).

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,16,780

பெண்

1,14,881

மூன்றாம் பாலினத்தவர்

10

மொத்த வாக்காளர்கள்

2,31,671

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1952 - 2011 )

ஆண்டு

வெற்றிபெற்றவர்

கட்சி

1952

காளிமுத்து

TTP

1957

எம்.செல்வராஜ்

சுயேச்சை

1962

ஜி.பூவராகவன்

இந்திய தேசிய காங்கிரஸ்

1967

ஜி.பூவராகவன்

இந்திய தேசிய காங்கிரஸ்

1971

எம்.செல்வராஜ்

திமுக

1977

சி.ராமநாதன்

திமுக

1980

ஆர்.தியாகராஜன்

திமுக

1984

ஆர்.தியாகராஜன்

திமுக

1989

ஜி.பூவராகவன்

ஜனதா தளம்

1991

ஆர்.டி.அரங்கநாதன்

அதிமுக

1996

குழந்தை தமிழரசன்

திமுக

2001

ஆர்.கோவிந்தசாமி

பாட்டாளி மக்கள் கட்சி

2006

விஜயகாந்த்

தேமுதிக

2011

முத்துக்குமார்

தேமுதிக

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

விஜயகாந்த்

தேமுதிக

61337

2

கோவிந்தசாமி

பாமக

47560

3

காசிநாதன்

அதிமுக

35876

4

அரவிந்த்

பகுஜன் சமாஜ் கட்சி

1265

5

விஜயகாந்த்

சுயேச்சை

1174

6

மங்கபிள்ளை

சமாஜ்வாதி கட்சி

878

7

விஜயகாந்த்.கே

சுயேச்சை

832

8

செந்தில்முருகன்

பகுஜன் சமாஜ் கட்சி

646

9

விஜயகாந்த்

சுயேச்சை

589

10

சாமீ

சுயேச்சை

489

11

துரை ராமசந்திரன்

சுயேச்சை

377

12

பிரதீப்குமார்

சுயேச்சை

313

13

ஸ்ரீனிவாசன்

சுயேச்சை

208

14

தேவி ஜரீனா

சுயேச்சை

187

151731

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

முத்துகுமார்.V

தேமுதிக

72902

2

நீதிராஜன்.T

காங்கிரஸ்

59261

3

கிருஷ்ணமூர்த்தி.R

இந்திய ஜனநாயக கட்சி

11214

4

ராஜேந்திரன்.K

சுயேச்சை

5640

5

சந்தானமூர்த்தி.S

சுயேச்சை

2907

6

பழமலை.A

பாஜக

2614

7

அருட்செல்வன்.K

பகுஜன் சமாஜ் கட்சி

1437

8

சுலோச்சனா அய்யாசாமி

சுயேச்சை

1216

9

அருண்குமார்.R

சுயேச்சை

1097

158288

SCROLL FOR NEXT