22 - விருகம்பாக்கம்

By செய்திப்பிரிவு

விருகம்பாக்கம் சட்டப்பேரவை தொகுதி 2009-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தற்போது இந்த தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக தேசிய முற்போக்கு திராவிட கழகத்தைச் சேர்ந்த பி.பார்த்தசாரதி உள்ளார். இவர் 2011-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க அணியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு, அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் தனசேகரனை தோற்கடித்தார்.

பி.பார்த்தசாரதி-தே.மு.தி.க பெற்றவாக்குகள்-71524

தனசேகரன் தி.மு.க பெற்ற வாக்குகள்-57430

தமிழகத்தில் மிகப்பெரிய சட்டப்பேரவை தொகுதிகளில் ஒன்றான வில்லிவாக்கம் தொகுதியின் சில பகுதி, ஆலந்தூர் தொகுதியின் சில பகுதிகளை பிரித்து புதிதாக 2009-ம் ஆண்டு விருகம்பாக்கம் சட்டப்பேரவை தொகுதி உருவாக்கப்பட்டது. இத்தொகுதியில் வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட சென்னை மாநகராட்சியின் 65 மற்றும் 128-வது வார்டுகள், ஆலந்தூர் தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி பகுதிகளான 129, 130 மற்றும் 131 ஆகிய வார்டுகள் இந்த தொகுதியில் உள்ளன. எம்.ஜி.ஆர்.நகர், ஜாபர்கான் பேட்டை, கோயம்பேடு மார்க்கெட், கே.கே.நகர், நெசப்பாக்கம் ஆகியவை இந்த தொகுதியில் அமைந்துள்ளன.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

கடந்த டிசம்பர் மாதம் பெய்த பலத்த மழை வெள்ளத்தில் இந்த தொகுதிக்குட்பட்ட பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு சரிவர வெள்ள நிவாரணம் கிடைக்கவில்லை எனவும் பரவலாக குற்றச்சாட்டு உள்ளது.

தென் சென்னை மக்களவை தொகுதிக்குள் விருகம்பாக்கம் தொகுதி இடம்பெற்றுள்ளது.

தமிழகத்தில் கோடம்பாக்கம் தொகுதிக்கு அடுத்து நிறைய திரைத்துறை பிரபலங்கள் மற்றும் தொழிலாளர்கள் விருகம்பாக்கம் தொகுதியில் வசிக்கின்றனர். தே.மு.தி.க தலைவர் விஜய்காந்த், பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை ஆகியோரது இல்லங்கள் இந்த தொகுதியில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற ஏ.வி.எம் ஸ்டுடியோ, ஆசியாவிலேயே மிகப்பெரிய காய்கறி, கனி, பூ மார்க்கெட் ஆகியவை விருகம்பாக்கம் தொகுதிக்குள் அமைந்துள்ளன.

கோயம்பேடு மார்க்கெட்டில் போதிய அடிப்படை வசதி செய்துத்தரப்படவில்லை. காய்கறி மார்கெட்டுக்கு வந்து செல்லும் வாகனங்களால் எந்நேரமும் வாகன போக்குவரத்து நெரிசல் உள்ளது. கழிவுநீர் வடிகால் பிரச்சனை உள்ளது. வாகன நெரிசலை குறைக்க, சாலைகளை அகலப்படுத்த வேண்டும் எனவும், கழிவு நீர் வடிகால் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் எனவும், காய்கறி மார்க்கெட்டில் போதிய அடிப்படை வசதி, துப்புறவுப் பணிகளை செய்து தர வேண்டும் எனவும் தொகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,46,841

பெண்

1,45,317

மூன்றாம் பாலினத்தவர்

80

மொத்த வாக்காளர்கள்

2,92,238

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

பார்த்தசாரதி

தேமுதிக

71524

2

தனசேகரன்

திமுக

57430

3

ஸ்ரீதரன்

பிஜேபி

7525

4

நாகவேல்

சுயேச்சை

3431

5

பாஸ்கர்

பு பா

1447

6

சுப்பிரமணியம்

பிஎஸ்பி

969

7

பார்த்தசாரதி

சுயேச்சை

670

8

ஸ்ரீதர்

சுயேச்சை

540

9

தியாகராஜன்

சுயேச்சை

309

10

வளையாபதி

சுயேச்சை

224

144069

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

35 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

44 mins ago

இந்தியா

51 mins ago

இந்தியா

57 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்