சென்னை

சென்னை மாவட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கை

செய்திப்பிரிவு

1. அண்ணா நகர் அரசுப் பொது மருத்துவமனை விரிவுபடுத்தப்பட்டு, அவசர சிகிச்சைப் பிரிவுகள் அதிகரிக்கப்பட்டு, கட்டுமான வசதிகள் செய்து தரப்பட்டு தரம் உயர்த்தப்படும்.

2. தியாகராய நகர் பகுதியில் நவீன அடுக்குமாடி கார் நிறுத்தும் இடம் அமைக்கப்படும்.

3. அம்பத்தூர் சி.டி.எச் சாலையில் அமைந்துள்ள இரயில்வே மேம்பால சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற முயற்சி மேற்கொள்ளப்படும்.

4. மணலி நகரம் முழுமைக்கும் பாதுகாக்கப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட (மெட்ரோ குடிநீர்) குடிநீர் இணைப்பு அனைத்து இல்லங்களுக்கும் வழங்க வகை செய்யப்படும்.

5. சென்னை மாநகரில் பல்வேறு வட்டங்களில் இளைஞர்களுக்காக விளையாட்டுத் திடலும், பயிற்சி மையங்களும் அமைக்கப்படும்.

6. சென்னை புளியந்தோப்பு பகுதியில் 20 ஏக்கர் நிலத்தில் ஆடு, மாடு இறைச்சிக் கூடம் அமைக்கும் பணி தி.மு.க ஆட்சி காலத்தில் துவங்கப்பட்டு, தற்போதைய அ.தி.மு.க அரசால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இத்திட்டம் விரைந்து முடிக்கப்படும்.

7. கொளத்தூர் தொகுதியில் வண்ண மீன் பண்ணைகளின் வளர்ச்சி விரிவாக்கத்திற்காகத் தேவையான வசதிகள் செய்து தரப்படும். மேலும், வண்ணமீன் ஆராய்ச்சி மற்றும் ஏற்றுமதி மையமும் ஏற்படுத்தித் தரப்படும்.

8. சென்னை நகரில் உள்ள அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்.

9. அம்பத்தூர், முகப்பேர் பகுதி மக்களுக்கு மின் மயான வசதி செய்து தரப்படும்.

10. அண்ணா நகர், அரும்பாக்கம், அம்பேத்கர் நகர் பகுதிகளில் அரசுப் பொது இடத்தில் வாழும் மக்களுக்குப் பட்டா தொடர்பான பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும்.

11. சென்னை மக்களின் குடிநீர்ப் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும்.

12. சென்னையில் பழுதடைந்துள்ள குடிசை மாற்று வாரிய வீடுகள் புதுப்பித்துத் தரப்படும்.

13. சென்னையில் உள்ள சலவைத் துறைகளில் நவீன தொழில் நுட்ப வசதிகள் செய்துதரப்படும்.

14. கொளத்தூர், கொடுங்கையூர், பெரம்பூர் போன்ற பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும்.

15. பெரியார் நகரில் அமைந்துள்ள புறநகர் மருத்துவமனை தரம் உயர்த்தப்படும்.

SCROLL FOR NEXT