75-ம் ஆண்டு ராணுவ தினத்தையொட்டி: தமிழகத்தில் 5 அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்பாடு

By செய்திப்பிரிவு

சென்னை: ராணுவ தினத்தின் 75-ம் ஆண்டை முன்னிட்டு, வித்யாஞ்சலி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 5 அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன.

தென்மண்டல ராணுவம் சார்பில், வித்யாஞ்சலி திட்டத்தின் கீழ் தென்னிந்தியாவில் 75 அரசுப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 75-ம் ஆண்டு ராணுவ தினத்தை முன்னிட்டு அந்தப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு, புத்தகங்கள், எழுது பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

மேலும், ராணுவ மருத்துவர்கள் மூலம் மருத்துவ முகாம்கள், யோகா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். இந்த திட்டத்தில் தமிழகத்தில் சென்னையில் 3 அரசுப் பள்ளிகளும், நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் 2 அரசுப் பள்ளிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

வித்யாஞ்சலி திட்டம் இந்த ஆண்டு முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் தேர்வு செய்யப்பட்ட அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தல், தரமானக் கல்வியை வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

ராணுவ தினத்தின் 75-ம் ஆண்டை முன்னிட்டு, முதல்முறையாக டெல்லிக்கு வெளியே வரும் 15-ம் தேதி, பெங்களூருவில் ராணுவ தினக் கொண்டாட்டர் பேரணி நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது என்று பாதுகாப்புத் துறை பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

4 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

2 hours ago

உலகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்