எம்பிஏ, எம்சிஏ படிப்புக்கு ஆன்லைனில் செப்.5 வரை விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி மையம் மூலமாக எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி ஆகிய முதுநிலை படிப்புகள் யுஜிசி,ஏஐசிடிஇ ஆகியவற்றின் அங்கீகாரம் பெற்று பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.

இதற்கான மாணவர் சேர்க்கை ‘டான்செட்’ தேர்வு அல்லது தொலைதூரக் கல்விக்கான நுழைவுத் தேர்வு மூலம் நடத்தப்படும். அந்தவகையில் நடப்பு கல்வியாண்டில் (2023-24) தொலைதூரக் கல்வி சேர்க்கைக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழ கம் தற்போது வெளியிட்டுள்ளது.

தொலைதூரக் கல்வி மையத்தின் சார்பாக வழங்கப்படும் எம்பிஏ,எம்சிஏ, எம்எஸ்சி (சிஎஸ்) ஆகிய படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. https:/cdefee.annauniv.edu/ என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் செப்.5-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

அதன்பின், எம்பிஏ, எம்சிஏ சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு செப்.16-ம் தேதி நடைபெறும். ஏற்கெனவே டான்செட் தேர்வெழுதியபட்டதாரிகள் இந்த நுழைவுத் தேர்வில் பங்கேற்க வேண்டிய கட்டாயமில்லை. எம்எஸ்சி படிப்புக்கு எவ்வித நுழைவுத் தேர்வும் கிடையாது.இதுதொடர்பான கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று பல்கலை. தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

க்ரைம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்