பிஎஸ்சி நர்சிங், பிஃபார்ம் உள்ளிட்ட படிப்புகளுக்கு இன்றுமுதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

By செய்திப்பிரிவு

சென்னை: பிஎஸ்சி நர்சிங், பிஃபார்ம் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 2023 - 24-ம் கல்வி ஆண்டில் மருத்துவம் சார்ந்த பிஎஸ்சி நர்சிங், பிஃபார்ம் உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளில் சேருவதற்கு www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிப்பது ஜூன் 19-ம் தேதி (இன்று) காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டிய அனைத்து விவரங்களும் இணையதளங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. ஜூன் 28-ம் தேதி மாலை 5 மணிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.

வழக்கமாக, எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு பின்னரே, மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கு கலந்தாய்வு தொடங்கப்படும். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் இடம் கிடைக்காதவர்கள், மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேருவார்கள் என்பதால் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்ப பதிவு தொடங்காத நிலையில், மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்ப பதிவு இன்று தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

உலகம்

13 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

33 mins ago

இந்தியா

37 mins ago

வாழ்வியல்

47 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்