ஜூன் 22, 23-ல் சட்டப் படிப்புக்கான கலந்தாய்வு

By செய்திப்பிரிவு

சென்னை: 5 ஆண்டுகால சட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூன் 22, 23 ஆகிய தேதிகளில் இணையவழியில் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 15 அரசு, 9 தனியார் சட்டக் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் 5 ஆண்டுகால சட்டப் படிப்புகளில் 2,004 இடங்கள் இருக்கின்றன. இதேபோல், பல்கலை.யின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள சீர்மிகு சட்டப் பள்ளியில் 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு 624 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான பொது கலந்தாய்வு இணையவழியில் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நடப்பு கல்வியாண்டு (2023-24) சேர்க்கைக்கு 21,362 பேர் விண்ணப்பித்தனர். இவற்றில் தகுதிபெற்ற மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் மற்றும் கட்-ஆப் மதிப்பெண் விவரங்கள் கடந்த ஜூன் 16-ம் தேதி வெளியிடப்பட்டது. தற்போது நடைபெற்றுவரும் இணையவழியிலான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நாளையுடன் (ஜூன் 20) நிறைவு பெறுகின்றன.

தொடர்ந்து கலந்தாய்வு இணைய வழியில் ஜூன் 22, 23 ஆகிய தேதிகளில் நடத்தப்படும். 20-ல் சேர்க்கைக் கடிதம்: சேர்க்கை இடங்களை உறுதிசெய்த மாணவர்களுக்குக் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை ஜூன் 26-ம் தேதி வழங்கப்படும். அதைப் பெற்றுக் கொண்ட மாணவர்கள் ஜூன் 30-ம் தேதிக்குள் கல்லூரிகளில் சென்று சேர்ந்துவிட வேண்டும்.

சீர்மிகு சட்டப் பள்ளியில் சேர விண்ணப்பித்தவர்களுக்கு அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிந்துவிட்டன. தகுதியான மாணவர்களுக்கு ஜூன் 20-ம் தேதி சேர்க்கை கடிதம் வழங்கப்படும். பின்பு மாணவர்கள் ஜூன் 22-ம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும். கூடுதல் விவரங்களை http://tndalu.ac.in/ என்ற இணையதளம் வாயிலாக அறியலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

இந்தியா

20 mins ago

தமிழகம்

18 mins ago

இந்தியா

20 mins ago

வணிகம்

34 mins ago

இந்தியா

34 mins ago

இந்தியா

41 mins ago

இந்தியா

47 mins ago

உலகம்

1 hour ago

சினிமா

4 hours ago

ஓடிடி களம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்