விவாதக் களம்

தேர்தல் களத்தில் புதிய தாக்குதல் போக்கு!

செய்திப்பிரிவு

"பாஜக இப்போது திருடர்கள் / கொள்ளையர்கள்"

"மத்திய அரசு மாநிலங்களுக்கு தரும் நிதியுதவிப் பணம், ராகுலின் மாமன் வீட்டுப் பணமா?"

"மதவெறியை பரப்பி வரும் பாஜகவால் நாட்டின் ஒற்றுமைக்கே பாதிப்பு."

"உங்களுக்கு வியாதி உள்ள நிலையில், தைரியமிருந்தால் உங்கள் மகனிடம் பொறுப்புகளை ஒப்படையுங்கள்."

"ரத்தக்கறை படிந்த கையின் நிழல் சத்தீஸ்கரின் மீது விழக்கூடாது."

இவை, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, குஜராத் முதல்வரும் பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி ஆகியோர் உதிர்த்த முத்துக்களில் சில.

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி காங்கிரஸும் பாஜகவும் மேற்கொண்டுள்ள தீவிரப் பிரசாரத்தின்போது, இரு கட்சித் தலைவர்களும் பரஸ்பரம் கடுமையாக சாடிக்கொள்கின்றனர்.

ஆனால், அந்தச் சாடல்களோ இரு கட்சிகளுமே மாறி மாறி நாளொரு சர்ச்சைப் பேச்சும், பொழுதொரு புகாருமாக தேர்தல் ஆணையத்தை நாடும் அளவுக்கு உள்ளன.

சட்டமன்றத் தேர்தல்களுக்கே இந்த நிலை என்றால், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் களம் எப்படியிருக்கும்?

தேசிய அரசியலில் தலைவர்களின் இந்த புதிய 'தாக்கு'தல் கலாசாரம் எந்த எல்லை வரை போகலாம்? இந்தப் போக்கு குறித்த உங்கள் பார்வை என்ன?

விவாதிப்போம் வாருங்கள்.

SCROLL FOR NEXT