சென்னை: சென்னையை அடுத்த பொழிச்சலூரை சேர்ந்தவர் ஐஸ்வர்யா. இவரது கணவர் அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். பொழிச்சலூரில் குழந்தைகளுடன் வசித்து வரும் ஐஸ்வர்யா, சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்றிரவு விமான நிலையத்தில் உள்ள திரையரங்கில் குழந்தைகளுடன் படம் பார்க்க ஐஸ்வர்யா சென்றார். படம் ஓடிக் கொண்டிருக்கும்போது கழிப்பறைக்கு சென்று வருவதாக குழந்தைகளிடம் சொல்லிவிட்டு சென்ற அவர், அங்குள்ள பன்னடுக்கு கார் பார்க்கிங்கின் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
தகவல் அறிந்து வந்த போலீஸார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மன அழுத்தத்தால் ஐஸ்வர்யா தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.