க்ரைம்

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: போக்சோவில் சென்னை ஒய்எம்சிஏ கல்லூரி முதல்வர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: பாலியல் புகாரில் சிக்கிய சென்னை நந்தனத்தில் ஒய்எம்சிஏ கல்லூரி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை நந்தனத்தில் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரி இயங்குகிறது. இந்த கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவருக்கு, முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக அந்த மாணவி சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் தொடர்பாக பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து கல்லூரி முதல்வர் ஆபிரகாமுக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்க அவர் ஒரு மாதம் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தார்.

இதனிடையே, இதே விவகாரத்தில் கல்லூரி நிர்வாகம் நடத்திய விசாரணையில், முதல்வர் ஆபிரகாம் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் கல்லூரி நிர்வாகம் சார்பில் கடந்த 9-ம் தேதி சென்னை சைதாப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து ஜார்ஜ் ஆபிகாரம் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்

SCROLL FOR NEXT