க்ரைம்

விமான நிலையத்தில் ரூ.2 கோடி தங்கம் பறிமுதல் - ஏர் இந்தியா நிறுவன ஊழியர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: கொழும்புவில் இருந்து சென்னைக்கு நேற்று விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களது உடமைகளையும் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது இரு ஆண் பயணிகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவர்களை சோதனை செய்தனர். இதில், அவர்கள் ரூ.41.15லட்சம் மதிப்பிலான, 820 கிராம்தங்கத்தை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதேபோல, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வந்த 2 ஆண் பயணிகளிடம் இருந்து ரூ.31 லட்சம் மதிப்பிலான, 618 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் புறப்பாடு பகுதியைக் கடந்து செல்ல முயன்ற ஏர் இந்தியா நிறுவன ஊழியர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம்ஏற்பட்டதையடுத்து, அவர் தடுத்துநிறுத்தப்பட்டார். அவரிடம் சோதனை செய்ததில், ரூ.1.28 கோடிமதிப்பிலான 2 கிலோ 555 கிராம்தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, தங்கத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரைக் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ.2 கோடி மதிப்பிலான, 3 கிலோ 993 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT