க்ரைம்

பொள்ளாச்சி | பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை: குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

செய்திப்பிரிவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண்ணை கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக பொள்ளாச்சியை சேர்ந்த ஸ்ரீ வினோத் (28) என்பவரை, கிழக்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தார்.

இந்நிலையில், பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட  வினோத் மீது கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பரிந்துரைத்ததன்பேரில் குண்டர்தடுப்புச் சட்டத்தின் கீழ்நடவடிக்கை எடுக்க ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டார். அதன்படி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில்ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடரும் என, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார். கடந்த ஒரு மாதத்தில் மட்டும், கோவை மாவட்டத்தில் 8 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT