ஆத்தூர் | வியாபாரியை கடத்த முயன்ற வழக்கில் கைதான தலைமைக் காவலர் பணியிடை நீக்கம்

By செய்திப்பிரிவு

ஆத்தூரில் பழ வியாபாரியை கடத்த முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட தலைமைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஆத்தூரில் உள்ள வடக்கு தில்லை நகரைச் சேர்ந்த பழ வியாபாரி அன்பரசன், சேலம் டவுனில் பழக்கடை நடத்தி வருகிறார். இவரது நண்பர் ராம்மோகன். இவர் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கணினி பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். இருவரும் பழ வியாபாரம் கூட்டாக செய்து வந்த நிலையில் ராம்மோகனுக்கு, அன்பரசன் ரூ.45 லட்சம் கொடுக்க வேண்டியிருந்தது.

இந்நிலையில், கடந்த 20-ம் தேதி ராமநாயக்கன்பட்டி வசிஷ்டநதி பாலத்தில் சென்ற அன்பரசனை, காரில் வந்த கும்பல் அடித்து கடத்த முயன்றனர். அவர்களிடமிருந்து தப்பிய அன்பரசன் ஆத்தூர் ரூரல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

விசாரணையில், ராம்மோகனுக்கு கொடுக்க வேண்டிய ரூ.45 லட்சத்தை கொடுக்காமல் ஏமாற்றியதால், அன்பரசனை ரவுடிகள் மூலம் கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து ராம்மோகன் உள்ளிட்ட 5 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கடத்தல் வழக்கில் சிக்கிய தலைமைக் காவலர் ராம்மோகனை பணியிடை நீக்கம் செய்து, சேலம் எஸ்.பி.அபிநவ் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

7 mins ago

ஆன்மிகம்

15 mins ago

ஆன்மிகம்

33 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்