விருதுநகர்: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட அருப்புக்கோட்டை செவிலியர் பயிற்சிக் கல்லூரித் தலைவர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அருப்புக்கோட்டை தெற்குத் தெருவில் உள்ள தனியார் செவிலியர் பயிற்சிக் கல்லூரித் தலைவர் தாஸ்வின் ஜான் கிரேஸ்(38). இவர், மாணவி ஒருவருக்கு ஆபாச வீடியோ அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்தது. அவரை அருப்புக்கோட்டை மகளிர் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இதையடுத்து, பாஜக சிறுபான்மைப் பிரிவு கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவரான தாஸ்வின் ஜான் கிரேஸ், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள, பாஜக விருதுநகர் கிழக்கு மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன், தாஸ்வின் ஜான் கிரேஸ், சரியாக செயல்படாததால் 3 மாதங்களுக்கு முன்பு கட்சிப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள புகாரின் அடிப்படையில் அவர் பாஜகவின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கப்படுகிறார் எனத் தெரிவித்துள்ளார்.