திருத்தணி நீதிமன்ற வளாகம் அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது

By செய்திப்பிரிவு

திருத்தணி

திருத்தணி ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகம் அருகே உணவ கத்தின் உள்ளே இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் அருகே உள்ள பெருமாள்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ்(25). இவர், கடந்த 16-ம் தேதி திருத்தணி, அரக் கோணம் சாலையில் ஒருங் கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே நடந்து சென்று கொண் டிருந்தார். அப்போது, அங்கு காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் மகேஷை துரத்தியது. அப்போது உயிரை காப்பாற்றிக்கொள்ள அருகே உள்ள உணவகத்தில் நுழைந்த மகேஷை சரமாரியாக வெட்டிவிட்டு அந்த கும்பல் தப்பியோடியது.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த மகேஷ், திருத்தணி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து, திருத்தணி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். திருத்தணி டிஎஸ்பி சேகர் தலைமையிலான 4 தனிப்படை போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். விசா ரணையில் தெரிய வந்ததாவது:

பெருமாள்பட்டு பகுதியில் கடந்த ஆண்டு நடந்த கைப்பந்து போட்டியின் போது, அதே பகுதியை சேர்ந்த விமல் ராஜ் என்கிற ஜப்பான்(25), சென்னையை சேர்ந்த ரவுடி லல்லு மற்றும் அவரது நண்பர்களை அழைத்து வந்து, போட்டியில் பங்கேற்க செய் துள்ளார். இது தொடர்பாக, விமல்ராஜ் தரப்புக்கும், மகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் விக்கி, ஜாகீர் உசேன், பால்தினகரன், லியாஸ் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அந்த தகராறின் காரணமாக, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, விமல்ராஜ் தரப்பினர், பால்தினகரனின் கையை வெட்டினர். கடந்த மார்ச் 10-ல் மகேஷ் மற்றும் விக்கியை, விமல்ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் கத்தியால் வெட்டி னர். இதில், விக்கி கொலை செய்யப் பட்டார்; மகேஷ் உயிர் தப்பினார்.

இதுதொடர்பாக கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்ட விமல்ராஜ் கடந்த ஜூன் மாதம், ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 1-ம் தேதி, மகேஷின் நண்பர்கள் 3 பேர், விக்கி கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் விமல்ராஜ் தரப்பைச் சேர்ந்த தினேஷை கொலை செய்ய முயற்சித்தனர்.

இதுதொடர்பாக, மகேஷின் நண்பர் கள் 3 பேரை செவ்வாப்பேட்டை போலீ ஸார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். இவர்களை கடந்த 16-ம் தேதி ஆஜர்படுத்துவதற்காக திருத் தணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு போலீஸார் அழைத்து வந்தனர். அப்போது, தன் நண் பர்களை பார்க்க வந்த மகேஷை, விமல்ராஜ் தரப்பினர் கொலை செய் துள்ளனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகேஷ் கொலை தொடர்பாக விசா ரித்து வந்த தனிப்படை போலீ ஸார் நேற்று பெருமாள்பட்டு பகுதி யில் பதுங்கியிருந்த விமல்ராஜ் மற் றும் பெருமாள்பட்டு பகுதியைச் சேர்ந்த கோபிராஜ்(26), அஜீத்குமார் (25), திருநின்றவூரைச் சேர்ந்த ராஜ்(25) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அதுமட்டுமல்லாமல், கொலையாளி கள் பயன்படுத்திய காரின் ஓட்டுநரான சதீஷையும் கைது செய்தனர்.

இதில், விமல்ராஜ், கோபிராஜ், அஜீத்குமார், ராஜ் ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்ய சென்ற போது, அவர்கள் போலீஸாரிடம் தப் பிக்க முயற்சித்தனர். அந்த முயற்சி யின்போது கீழே விழுந்ததால், 4 பேரின் கை, கால்களில் காயம் ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE