க்ரைம்

ராயபுரம் துணிக்கடையில் திருடிய 3 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: ராயபுரத்தில் உள்ள துணிக்கடையில் பூட்டை உடைத்து பணம் திருடிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை ராயபுரம் மேற்கு கல்மண்டபம் சாலை பகுதியில் வசித்து வருபவர் ஜெயச்சந்திரன் (68). இவர், ராயபுரம் குமாரசாமி சந்தில் துணிக்கடை நடத்தி வருகிறார். ஜெயசந்திரன் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று காலை கடையை திறக்க வந்தார்.

அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, கடையிலிருந்த பணம் ரூ.1,500 திருடு போனது தெரியவந்தது. இது குறித்து, ராயபுரம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸார், திருட்டு தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த தனுஷ் (19), கார்த்திக் (20), பிரகாஷ் (19) ஆகிய 3 பேரை கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT