சென்னை | இருசக்கர வாகனங்கள் திருடிய 3 பேர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்களைத் திருடிய3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை சாலிகிராமம், சாரதாம்மாள் தெருவைச் சேர்ந்தவர் மனோஜ்குமார்(21). இவர் கடந்த மார்ச்27-ம் தேதி இரவு, அவரது இருசக்கர வாகனத்தை வீட்டு வாசலில் நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை அவரது இருசக்கரவாகனம் திருடு போயிருந்தது. இது குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.

முதல்கட்டமாக சம்பவ இடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், மனோஜ் குமாரின் வாகனத்தைத் திருடியது மாங்காடு வசந்தபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீநாத்(22), திருவேற்காடு சிவசங்கர் நகர் தீபன் குமார்(20), ஐயப்பன்தாங்கல் பிள்ளையார் கோயில் தெரு தங்கராஜ் (22) என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

இவர்கள் 3 பேரும், மாங்காடு, காஞ்சிபுரம், செய்யாறு மற்றும் வெள்ளவேடுபகுதிகளில் இருசக்கர வாகனங்களைக் குறி வைத்து திருடியது தெரியவந்தது.அவர்களிடமிருந்து 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 3 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

3 mins ago

மாவட்டங்கள்

33 mins ago

உலகம்

38 mins ago

தமிழகம்

43 mins ago

தொழில்நுட்பம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்