போதைப்பொருள் கடத்திய உணவு டெலிவரி பிரதிநிதி கைது  @ பெங்களூரு

By செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் போதைப்பொருள் கடத்திய குற்றத்துக்காக உணவு டெலிவரி பிரதிநிதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மத்திய குற்றப்பிரிவின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரின் பெயர் பாப ஜோதி டோலி என போலீஸார் தெரிவித்துள்ளனர். அசாம் மாநிலத்தை சேர்ந்தவர். சுமார் 7 ஆண்டுகளுக்கும் மேலாக பெங்களூருவில் அவர் உணவு டெலிவரி பிரதிநிதியாக பணியாற்றி வந்துள்ளார். தனது சொந்த ஊரில் இருந்து கஞ்சாவை வர வைத்துள்ளார். அதனை தான் குடியிருக்கும் வாடகை வீட்டில் வைத்து, வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்துள்ளார்.

காவலர்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் உணவு டெலிவரி பிரதிநிதி பணியை அவர் தேர்வு செய்துள்ளார். அவரது கூட்டாளிகள் குறித்த தகவலை பெற காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே பாணியில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிசினஸ் விசாவில் வந்த நைஜீரியாவை சேர்ந்த ஹென்றி என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து ரூ.4 கோடி மதிப்பிலான எம்டிஎம்ஏ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவரது விசா காலாவதியாகி உள்ளதும் தெரியவந்துள்ளது. அவரிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

7 days ago

மேலும்