க்ரைம்

சென்னை | ரயிலில் 10 கிலோ கஞ்சா கடத்திய இளம் பெண் பிடிபட்டார்

செய்திப்பிரிவு

சென்னை: ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து விரைவு ரயில் நேற்று சென்னை சென்ட்ரல் நிலையம் வந்தது. அதில், வந்த ஓர் இளம் பெண்ணின் பையை ரயில்வே போலீஸார் சோதித்தபோது, அதில், ரூ.2 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.

தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையில், அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜோதிகா தாஸ் (25) என்பதுதெரியவந்தது. ஒடிசாவில் ஒரு பத்திரிகை செய்தியாளராக பணிபுரிந்து வருவதாகவும் கூறினார்.

கைது செய்யப்பட்ட பெண்ணையும், கஞ்சா பொட்டலங்களையும் பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT