சென்னையில் ரூ.280 கோடி மதிப்பில் போதை பொருள் சிக்கிய விவகாரம்: என்ஐஏ அதிகாரிகள் விசாரிக்க திட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் ரூ.280 கோடி மதிப்புள்ள போதை பொருள் கைப்பற்றப்பட்ட விவகாரம் குறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

சென்னையில் இருந்து இலங்கைக்கு போதை பொருட்களை கடத்த சிலர் திட்டமிட்டிருப்பதாக தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு (சென்னை மண்டலம்) போலீஸாருக்கு சமீபத்தில் ரகசிய தகவல் கிடைத்தது. அப்பிரிவு இயக்குநர் அரவிந்தன் உத்தரவின்பேரில், போலீஸார் தீவிர கண்காணிப்பு, ரோந்து, வாகன சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள விடுதிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. சந்தேகப்படும் வகையிலான விடுதிகளில் நள்ளிரவில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. அங்கு வெளிநாட்டினர், வெளி மாநிலத்தினர் தங்கி உள்ளனரா என்றும் ஆய்வு செய்யப்பட்டது. கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீஸார் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

அப்போது, ஒரு விடுதியில் தங்கியிருந்த இலங்கையை சேர்ந்த உதயகுமார் என்பவரை பிடித்து விசாரித்தனர். அவர் தங்கி இருந்த அறையில் தீவிர சோதனை நடத்தி, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த2 கிலோ மெத்தம்பெட்டமைன் போதை பொருளை போலீஸார் கைப்பற்றினர். அவரை கைது செய்தனர்.

அவர் கொடுத்த தகவலின்பேரில், பெரம்பூரை சேர்ந்த அக்பர் அலி என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மறைத்து வைத்திருந்த 54 கிலோ மெத்தம்பெட்டமைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த போதை பொருட்களை மியான்மரில் இருந்து மணிப்பூரில் உள்ள மோரே வழியாக இந்தியாவுக்கு கடத்தி வந்துள்ளனர். பின்னர், சென்னைக்கு கொண்டு வந்துள்ளனர். இங்கிருந்து இலங்கைக்கு கடத்தி செல்ல திட்டமிட்டிருந்தனர் என தொடர் விசாரணையில் தெரியவந்தது.

கைப்பற்றப்பட்ட 56 கிலோ போதை பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.280 கோடி இருக்கும் என போலீஸார் தெரிவித்தனர். இதுதவிர, மேலும் 5 கிலோ போதை பொருள் கைப்பற்றப்பட்டதாகவும், மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

கைதானவர்களுக்கு சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து விரிவாகவும், வெளிநாடுகளிலும் விசாரணை நடத்தவேண்டி உள்ளதால், இந்த விவகாரத்தை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

7 days ago

மேலும்