க்ரைம்

சாலை விபத்தில் தெலங்கானா மாநில பக்தர்கள் 3 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

பெரியகுளம்: தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்றுவிட்டு, குமுளி, தேனி, பெரியகுளம் வழியாக காரில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். நேற்று பிற்பகல் 2.50 மணியளவில் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே, திண்டுக்கல்-குமுளி புறவழிச் சாலையில் கார் சென்று கொண்டிருந்தது.

திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரப் பாலத்தில் மோதியது. இதில் காரில் பயணம் செய்த தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் கமலாபுரத்தைச் சேர்ந்த சுப்பையா நாயுடு (55), அதே பகுதியை சேர்ந்த நரசாம்பையா (55),ராஜு (55) ஆகிய 3 பேர் பலத்தகாயமடைந்து, அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த ராமு (30), அஜய் (25) ஆகியோர் தேனி அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT