சரவணன் 
க்ரைம்

திண்டுக்கல்லில் திமுக நிர்வாகி கொலை

செய்திப்பிரிவு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மாவட்ட மாண வரணி துணை அமைப்பாளர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய் யப்பட்டார்.

திண்டுக்கல் குமரன் திருநகரைச் சேர்ந்தவர் சரவணன் (32). மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப் பாளராக இருந்தார். இவர் மீது கொலை, ஆள் கடத்தல், அடி தடி என 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. நேற்றிரவு திண்டுக்கல் அண்ணாநகர் சவுக்கு தோப்பு அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற போது காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சரவணனை மறித்து ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்தனர்.

தகவலறிந்த திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸார், கொலையான சரவணனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT