கரோனா வைரஸ்

தமிழகத்தில் புதிதாக 771 பேருக்கு கரோனா பாதிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 419, பெண்கள் 352 என மொத்தம் 771 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 345 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 63,068 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 34 லட்சத்து 20,364 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 459 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 4,678 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 737 ஆகவும், சென்னையில் 383 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.

முன்னதாக, இன்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 12,249 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

81,687 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 9,862 பேர் கடந்ந 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 196.45 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரே மாதத்தில் பி.ஏ.5 வகை தொற்று 21 சதவீதம் அதிகரித்து உள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதை தடுக்க தமிழக அரசு பல முயற்சிகளை செய்து வருகிறது. குறிப்பாக சோதனைகளை அதிகரிப்பது, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. விரிவாக வாசிக்க

SCROLL FOR NEXT