இந்தியாவில் 8000-ஐ கடந்தது தினசரி கரோனா பாதிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 8,000-ஐ இன்று கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 8,329 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பு 7,584 என்பது கவனிக்கத்தக்கது.

கரோனா நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்கள்: இந்தியாவில் இதுவரை 194.92 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது.

> இந்தியாவில் கரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 40,370 ஆக உள்ளது. கரோனா சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 0.09 % உள்ளது. குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.69 % ஆக உள்ளது.

> கடந்த 24 மணி நேரத்தில் 4,216 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் கரோனாவிலிருந்து சுமார் 4,26,48,308 பேர் குணமடைந்துள்ளனர்.

> கடந்த 24 மணி நேரத்தில் 8,329 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 2.41 சதவீதமாகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 1.75% உள்ளது.

> இதுவரை மொத்தம் 85.45 கோடி கரோணா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 3,44,994 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

13 mins ago

தமிழகம்

15 mins ago

சினிமா

26 mins ago

இந்தியா

23 mins ago

இந்தியா

32 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்