கரோனா: வீட்டிலேயே இருக்கும் 100 கோடி மக்கள்; பலி எண்ணிக்கை 13 ஆயிரத்தைத் தாண்டியது

By செய்திப்பிரிவு

கரோனா முன்னெச்சரிக்கையாக உலக அளவில் சுமார் 100 கோடி மக்கள் வீடுகளிலேயே தங்கியுள்ளனர். பலி எண்ணிக்கை 13 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்ட கரோனா வைரஸ், உலக நாடுகள் முழுவதிலும் அதீத பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சர்வதேச அளவில் 35 நாடுகள் முழு அடைப்பை அமல்படுத்தி உள்ளன. பயணம், வர்த்தகம், வியாபாரம் ஆகியவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. வைரஸ் பரவுதலைத் தடுக்க இந்த நடவடிகைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இத்தாலி முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்குதான் சீனாவை அடுத்து 4,800 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலகம் முழுவதும் ஏற்பட்ட மரணங்களில் மூன்றில் ஒரு பங்கு இத்தாலியில் ஏற்பட்டதாகும்.

இதற்கிடையே அமெரிக்காவிலும் லட்சக்கணக்கானோர் வீட்டிலேயே தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நியூ ஜெர்ஸியில் பல்வேறு மாகாணங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஃபிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளிலும் மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நாட்டுக்குள்ளேயே பயணிப்பதைத் தவிர்க்குமாறு அரசு கேட்டுக்கொண்டது,

அதேபோல இந்தியாவிலும் இன்று முழுவதும் காலை 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே தங்கியுள்ளனர். இவ்வாறு வீட்டிலேயே தங்கியிருக்கும் எண்ணிக்கை உலக அளவில் சுமார் 100 கோடியாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

23 mins ago

சினிமா

28 mins ago

இந்தியா

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்