கரோனா அச்சுறுத்தல்: மாஹே பிராந்தியத்தில் மதுக்கடைகளை மார்ச் 31-ம் தேதி வரை மூட புதுச்சேரி அரசு உத்தரவு

By செ.ஞானபிரகாஷ்

கோவிட்-19 அச்சுறுத்தலால் மாஹே பிராந்தியத்தில் வரும் 31-ம் தேதி வரை மதுபானக் கடைகள், பார்கள், மதுபான விற்பனையுடன் கூடிய உணவகங்களை மூட புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்கள் உள்ளன. அதில் கேரளம் அருகேயுள்ள மாஹே பிராந்தியத்தில் கோவிட்-19 தடுப்பு முன்னேற்பாடு பணிகள் தீவிரத்தில் உள்ளன. ஏற்கெனவே கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டது.

இச்சூழலில் கேரளத்தில் கோவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக அதையொட்டி அமைந்துள்ள புதுச்சேரி பிராந்தியமான மாஹேவில் பல தடுப்பு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி அரசு கலால்துறை மாஹேவில் உள்ள மதுவிற்பனைக் கடைகள், பார்கள், மது விற்பனையுடன் கூடிய உணவகங்களை வரும் 31-ம் தேதி வரை மூட வேண்டும். அருகாமை மாநிலமான கேரளத்திலும், நாடு முழுவதும் உள்ள கோவிட்-19 தாக்கத்திலிருந்து பாதுகாக்க மக்கள் ஒன்று கூடுவதைத் தவிர்க்கவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகள் மார்ச் 31-ம் தேதி வரை மூடப்படுகிறது என்று புதுச்சேரி அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்