கரோனா வைரஸ்

கிரீஸ் நாட்டில் கரோனா வைரஸுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை மூன்று ஆக அதிகரிப்பு

பிடிஐ

சனிக்கிழமையான இன்று கிரீஸ் நாட்டில் கரோனா வைரஸுக்கு 2 பேர் பலியாக மொத்தமாக உயிரிழப்பு 3 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் ஒரு சில தவிர மீதி கடைகள் மூடப்பட்டன.

ஜாகிந்தாஸ் தீவில் 67 வயது முதியவர் பலியானார், மேலும் இன்ரு வடக்க்கு நகரான டோலமெய்டாவில் 90 வயது முதியவர் ஒருவரும் பலியாகியதாக கிரீஸ் நாட்டில் கரோனா பலி 3 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கிரீஸ் மேற்கு நகரத்தில் கரோனா பாதிப்புக்கு முதல் நபர் பலியான மருத்துவமனைக்கு 67 வயது நபர் சென்று வந்ததையடுத்து இவருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டது.

கிரீஸில் கடைகள், உணவு விடுதிகள், மதுபான நிலையங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. அக்ரோபோலீஸ் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களும் பொதுமக்களுக்கு மூடப்பட்டன. கரோனாவுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கிரீசில் 117லிருந்து 190 ஆக அதிகரித்துள்ளது.

சூப்பர் மார்க்கெட்டுகள், மருந்துக் கடைகள் மற்றும் மருத்துவ சிகிச்சை மையங்கள் மட்டுமே திறந்துள்ளன. அரசு ஏற்கெனவே பள்ளிகள், பல்கலைக் கழகங்கள், நீதிமன்றங்கள், சினிமாக்கள், உடற்பயிற்சி நிலையங்கள், திரைய்ரங்குகள் ஆகியவற்றை மூட உத்தரவிட்டுள்ளது.

2020 ஒலிம்பிக் போட்டிகள் நடக்குமா என்ற ஐயம் எழுந்துள்ள நிலையில் பண்டைய புகழ்பெற்ற ஒலிம்பியாவில் ஒலிம்பிக் ஜோதி பார்வையாளர்கள் இல்லாமலேயே ஏற்றப்பட்டது.

இதற்கிடையே கிரீஸ் அரசு செய்தித் தொடர்பாளர் ஸ்டீலியோஸ் பெஸ்டாஸ் என்பவரின் மனைவி கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT