புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸுக்கு தயாராகும் ரஜினியின் ‘பாபா’

By செய்திப்பிரிவு

மறு படத்தொகுப்பு மற்றும் டால்பி மிக்ஸ் ஒலிக் கலவையுடன் ரஜினியின் ‘பாபா’ திரைப்படம் மீண்டும் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2002-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் ‘பாபா’. இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். ‘அண்ணாமலை’, ‘வீரா’, ‘பாட்ஷா’ படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக ‘பாபா’ படத்தை இயக்கினார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா. கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய வேடங்களில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, ரியாஸ்கான், எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது இந்தப் படம் மீண்டும் புதுப்பொலிவுடன் புதிய திரையிடலுக்கு தயாராகி உள்ளது. இதற்காக முற்றிலும் புதிய கோணத்தில் இந்தப் படம் புதிதாக மறு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளதாம். நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு டிஜிட்டலில் ஒவ்வொரு பிரேமும் இன்னும் மேம்படுத்தப்பட்டுள்ளதாம்.

மேலும் 'மாயா மாயா ', 'சக்தி கொடு', 'கிச்சு கிச்சு' என ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் புதிதாகவே ரீமிக்ஸ் செய்யப்பட்டு டால்பி மிக்ஸ் ஒலி அமைப்புக்கு மாற்றப்பட்டுள்ளதாம். படத்திற்கான சிறப்பு சப்தங்களும் கூட இன்னும் விறுவிறுப்பு கூட்டப்பட்டுள்ளனவாம். விரைவில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

15 mins ago

கல்வி

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

உலகம்

10 hours ago

வாழ்வியல்

11 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்