நடிகர் விஷால் | கோப்புப் படம் 
தமிழ் சினிமா

நான் ஏற்கெனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்: விஷால் தகவல்

செய்திப்பிரிவு

நடிகர் விஷால், ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள அமீன் பீர் தர்காவில் நேற்று முன்தினம் வழிபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: இந்த தர்காவிற்கு பல நாட்களாக வரவேண்டும் என நினைத்திருந்தேன். இப்போதுதான் வந்துள்ளேன். நான் அல்லா, வெங்கடேஸ்வர சுவாமி, இயேசு என அனைவரையும் வழிபடுவேன்.

அதன்படி இங்கும் வந்துள்ளேன். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் பயோபிக்கில் நடிக்க இருப்பதாகக் கூறுகிறார்கள். நான் நடிக்கவில்லை. என்னுடைய ‘லத்தி’ படம் டிசம்பரில் வெளியாகும். நான் அரசியலுக்கு வருவது பற்றி கேட்கிறார்கள். ஒருவர், 100 ரூபாய் செலவு செய்து சேவை செய்தால் அவர் அரசியலுக்கு வந்ததாகவே அர்த்தம். அதனால் நான் ஏற்கெனவே அரசியலுக்கு வந்துவிட்டேன். தீவிர அரசியலுக்கு வர இன்னும் காலமாகும். இவ்வாறு விஷால் கூறினார்.

SCROLL FOR NEXT