சுந்தர்.சி-யின் ‘காஃபி வித் காதல்’ மாற்றப்பட்ட ரிலீஸ் தேதி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சுந்தர்.சி இயக்கும் 'காஃபி வித் காதல்' படத்தின் மாற்றப்பட்ட ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த ஆண்டு 'அரண்மனை 3' படம் வெளியானது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி முடித்துள்ளார். குஷ்புவின் 'அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட்' மற்றும் 'பென்ஸ் மீடியா நிறுவனங்கள்' இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில், ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா, உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

மூன்று நாயகர்கள், மூன்று நாயகிகள் நடிக்கும் படமாக இது உருவாகியுள்ளது. இப்படத்தில் இவர்களுடன் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது. படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படம் வரும் அக்டோபர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 'பொன்னியின் செல்வன் பாகம் 1' படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், திரையரங்குகள் கிடைக்காத காரணத்தால் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. அந்த வகையில் தற்போது படம் வரும் நவம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

11 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்