கமல்ஹாசன், பஹத்பாசில், விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்து வெளியான படம், ‘விக்ரம்’. அனிருத் இசை அமைத்திருந்த இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். சூப்பர் ஹிட்டான இந்த திரைப்படம் வசூலில் சாதனை படைத்தது. இந்நிலையில் வரும் 5 முதல் 14ம் தேதி வரை தென்கொரியாவின் பூசனில் நடைபெறும் சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘விக்ரம்’ திரையிடப்படுகிறது. வணிக மற்றும் கலைப் படங்களின் கலவையாக அமைந்திருக்கும் சர்வதேசப் புகழ்பெற்ற திரைப்படங்களை அங்கீகரிக்கும் விதமாகச் செயல்படும் 'ஓப்பன் சினிமா' என்ற பிரிவில் ‘விக்ரம்’ திரையிடப்பட இருக்கிறது.