படங்கள் வெளியீட்டை உறுதி செய்த தெலுங்கு திரையுலகம்: தமிழ்த் திரையுலகம் பின்பற்றுமா?

இந்த ஆண்டு வாரமொரு படம் என்ற ரீதியில் படங்கள் வெளியீட்டை உறுதி செய்துள்ளது தெலுங்கு திரையுலகம். இதனைத் தமிழ்த் திரையுலகினரும் பின்பற்றுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் கரோனா அச்சுறுத்தல் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் என அனைத்தும் மூடப்பட்டன. இதனால் திட்டமிடப்பட்ட பல்வேறு படங்கள் வெளியிட முடியாமல் தவித்து வந்தன. மேலும், படங்கள் வெளியீட்டில் குழப்பங்கள் நீடிக்கத் தொடங்கியது.

தற்போது கொஞ்சம் சகஜ நிலைக்குத் திரும்பியுள்ளோம். திரையரங்குகளில் 100% இருக்கைக்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் நிறுத்தி வைக்கப்பட்ட பல படங்கள் வெளியீட்டை உறுதி செய்ததால் குழப்பம் நீடித்தது. தெலுங்கு திரையுலகினர் இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தி வாரமொரு படம் என்று பேசி முடிவு செய்துள்ளன. பல்வேறு முன்னணி படங்கள் உறுதிப்படுத்தியுள்ள வெளியீட்டுத் தேதி விவரம்:

பிப்ரவரி 12 - உப்பெனா, சாஷி

பிப்ரவரி 19 - செக்

பிப்ரவரி 26 - ஏ 1 எக்ஸ்பிரஸ், கபடதாரி

மார்ச் 11 - ஸ்ரீகரம், ஜாதி ரத்னாலு, காலி சம்பத்

மார்ச் 26 - ரங்க் தே, ஆரண்யா

ஏப்ரல் 2 - சீட்டிமார்

ஏப்ரல் 9 - வக்கீல் சாப்

ஏப்ரல் 16 - லவ் ஸ்டோரி, டக் ஜெகதீஷ்

ஏப்ரல் 30 - விராதபர்வம்

மே 13 - ஆச்சாரியா

மே 14 - நாரப்பா

மே 28 - கில்லாடி, பாலகிருஷ்ணா - போயபடி ஸ்ரீனு

ஜூலை 2 - மேஜர்

ஜூலை 16 - கே.ஜி.எஃப் சேப்டர் 2

ஜூலை 30 - கஹானி

ஆகஸ்ட் 13 - புஷ்பா

ஆகஸ்ட் 19 - மஹா சமுத்ரம்

ஆகஸ்ட் 27 - எஃப் 3

அக்டோபர் 13 - ஆர்ஆர்ஆர்

பொங்கல் 2022 - சர்காரு வாரி பாட்டா

இதே முறை தமிழ்த் திரையுலகிலும் சாத்தியமா என்பது தான் பலருடைய கேள்வியாக இருக்கிறது. ஏனென்றால் சங்கங்கள் பிரிந்திருப்பதால் ஒன்று கூடி பேச்சுவார்த்தை என்பது இயலாத காரியமாக உள்ளது. தமிழ்த் திரையுலக நலனாக ஒன்றுக் கூடி பேச வேண்டும் என்பது பலருடைய எண்ணமாக இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE