கமல் - லோகேஷ் கனகராஜ் இணையும் விக்ரம்

By செய்திப்பிரிவு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள படத்துக்கு 'விக்ரம்' எனத் தலைப்பிட்டுள்ளனர்.

'மாஸ்டர்' படத்துக்குப் பிறகு கமல் நடிப்பில் உருவாகும் படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். அனிருத் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கி, அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

இன்று (நவம்பர் 7) கமல் பிறந்த நாளை முன்னிட்டு, லோகேஷ் கனகராஜ் படத்தின் பெயருடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்தது. அதன்படி தற்போது இந்தப் படத்துக்கு 'விக்ரம்' என அறிவித்துப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும், தலைப்புக்கான டீஸரையும் வெளியிட்டுள்ளது படக்குழு.

இதனைக் கமல் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மேலும், கமல் பிறந்த நாளை முன்னிட்டு திரையுலகப் பிரபலங்கள் பலரும் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

'விக்ரம்' திரைப்படம் முழுக்க க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகிறது. சென்னையிலேயே ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை முடித்து, 'இந்தியன் 2' படத்துக்கு முன்பாகவே வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

க்ரைம்

6 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

க்ரைம்

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்