நடிகராக அறிமுகமாகும் செல்வராகவன்: கீர்த்தி சுரேஷ் உடன் ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ள புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் செல்வராகவன்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வஸந்த் ரவி, ரவீனா, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ராக்கி'. ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். ஆர்.ஏ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.

சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீஸருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் ஒளிப்பதிவு, காட்சியமைப்புகள் ஆகியவற்றுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். தற்போது அருண் மாதேஸ்வரன் தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார்.

நாயகியை முன்னிலைப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் இயக்குநர் செல்வராகவன் பல்வேறு வரவேற்புப் பெற்ற படங்களை இயக்கியுள்ள செல்வராகவன் இந்தப் படத்தின் மூலமே நடிகராக அறிமுகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

கீர்த்தி சுரேஷ் - செல்வராகவன் நடிக்கவுள்ள இந்தப் படத்துக்கு 'சாணிக் காயிதம்' என்று பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. 'சாணிக் காயிதம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை செல்வராகவன் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். நடிகராக அறிமுகமாகவுள்ள செல்வராகவனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

இந்தியா

42 mins ago

உலகம்

56 mins ago

வணிகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

5 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்