ஃபேஸ்புக் பக்கம் ஹேக் செய்து மார்ஃபிங் படங்கள்: அனுபமா பரமேஸ்வரன் காட்டம்

By செய்திப்பிரிவு

தனது ஃபேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டதற்கும், மார்ஃபிங் படங்களை வெளியிட்டதற்கும் அனுபமா பரமேஸ்வரன் காட்டமாகப் பதிலளித்துள்ளார்.

சமீபமாக ட்விட்டர் தளங்களில் போலி ட்விட்டர் கணக்குகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதில் அஜித், வடிவேலு தொடங்கி பலரும் சிக்கலுக்கு உண்டானார்கள். பின்பு, அது தங்களுடைய பக்கமே அல்ல என்று மறுப்பு தெரிவித்தார்கள்.

இதனிடையே தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நாயகர்களுடன் நடித்து வரும் அனுபமா பரமேஸ்வரன் புதிய வகையிலான சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தை சிலர் ஹேக் செய்து, அதில் அவருடைய மார்ஃபிங் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக சைபர் க்ரைமில் அனுபமா பரமேஸ்வரன் புகார் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தற்போது தனது ஃபேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பிரிவில் அனுபமா பரமேஸ்வரன் கூறியிருப்பதாவது:

"இந்த முட்டாள்தனங்களுக்கு எல்லாம் நேரமிருக்கும் அருவருப்பான நபர்களுக்கு, உங்கள் வீட்டில் அம்மா, சகோதரி இல்லையா? உங்கள் மூளையை இது போன்ற முட்டாள்தனங்களுக்குப் பயன்படுத்தாமல் ஆக்கபூர்வமான விஷயங்களில் பயன்படுத்துங்கள். இதைத் தெளிவுபடுத்த விரும்பினேன்".

இவ்வாறு அனுபமா பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழில் தனுஷ் நடித்த 'கொடி' படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடித்து வரும் 'தள்ளிப் போகாதே' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் அனுபமா பரமேஸ்வரன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

இந்தியா

35 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்