ஹோசிமின் - மிர்ச்சி சிவா இணையும் சுமோ

By செய்திப்பிரிவு

எஸ்.பி.ஹோசிமின் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்து வரும் புதிய படத்துக்கு 'சுமோ' என்று பெயரிட்டுள்ளது படக்குழு.

’தமிழ்ப்படம் 2’ படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ’பார்ட்டி’ படத்தில் நடித்துள்ளார் மிர்ச்சி சிவா. இந்தப் படம் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 'பிப்ரவரி 14' படத்தின் இயக்குநர் எஸ்.பி.ஹோசிமின் இயக்கத்தில் உருவான புதிய படத்தில் நடிக்கத் தொடங்கினார் மிர்ச்சி சிவா

ஜப்பானில் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் நாயகியாக ப்ரியா ஆனந்த் நடித்து வருகிறார். மிர்ச்சி சிவா - ப்ரியா ஆனந்த் கூட்டணி ஏற்கெனவே 'வணக்கம் சென்னை' படத்திலும் இணைந்து நடித்திருப்பது நினைவுகூரத்தக்கது. இவர்களுடன் யோசினோரி தாஷிரோ  என்ற சுமோ முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெருமாலும் ஜப்பானிலேயே படமாக்கப்பட்டுள்ளது. சுமோக்களின் வாழ்க்கையை முதல் முறையாக இந்திய சினிமாவில் கொண்டு வந்துள்ளனர். மேலும், அங்கிருந்து சுமோக்களை இந்தியாவுக்கு அழைத்து வந்து, இங்கும் சில காட்சிகளை படமாக்கியுள்ளனர்.

முழுக்க நகைச்சுவை கலந்த சென்டிமென்ட் படமாக உருவாகும் இதனை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறார். இதில் நாயகனாக நடிப்பது மட்டுமன்றி திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார் மிர்ச்சி சிவா. ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் கே.பிரசன்னா இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்