கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித்!

By ஸ்கிரீனன்

வீரம் படத்துக்குப் பிறகு, நடிகர் அஜித் நடிக்கும் படத்தை கெளதம் வாசுதேவ் மேனன் இயக்குகிறார் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ஆரம்பம் படம், தீபாவளிக்கு வெளியாகிறது. அதேவேளையில், வீரம் படத்தில் அஜித் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், வீரம் படத்துக்குப் பிறகு, கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பது, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வீரம் படத்தின் படப்படிப்பு முடிந்தவுடன், இந்தப் புதிய கூட்டணியின் படப்படிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.

கெளதம் வாசுதேவ் மேனன் - அஜித் இணையும் இந்தப் படத்தை, ஆரம்பம் படத்தின் தயாரிப்பு நிறுவனமே தயாரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

முன்னதாக, கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பதாக இருந்த படம் நின்று போனது. அதன் தொடர்ச்சியாக, விஜய் நடிப்பில் 'யோகன் - அத்தியாயம் ஒன்று' என்ற படமும், சூர்யா நடிப்பில் 'துருவ நட்சத்திரம்' என்ற படமும் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டு, திட்டத்தோடு நின்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தொழில்நுட்பம்

9 hours ago

சினிமா

10 hours ago

க்ரைம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்